நான் உனக்கு தந்தையாக இருக்கிறேன்! பாசம் காட்டி மோசம் செய்த நபர்!

Photo of author

By Hasini

நான் உனக்கு தந்தையாக இருக்கிறேன்! பாசம் காட்டி மோசம் செய்த நபர்!

ஒருவர் பாசத்திற்காக ஏங்குகிறார் என தெரிந்தால் பலபேர் அதாவது சில ஏமாற்று பேர்வழிகள் நான் இருக்கிறேன் என்று பாசமழை பொலிந்து அவர்களை எப்படி தன் வசம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தான் பார்க்கிறார்கள். இது போல் மதுரை அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது.

22 வயதான சிக்கந்தர் ராஜா என்ற நபர், மதுரை கூடல் நகர் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் வாழ்ந்து வந்த அதே பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தனது தாய் தந்தையை இழந்து தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தாய் தந்தை இல்லாமல் பாசத்திற்கு ஏங்கி தவித்த மாணவிக்கு சிக்கந்தர் ராஜா, அந்த சிறுமிக்கு பெரும் ஆறுதலாக இருந்ததுடன், அவருடன் நெருங்கி பழகியும் வந்துள்ளார்.

இதையடுத்து சிறுமியை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி, நண்பரின் வீட்டிற்கு அடிக்கடி சிறுமியை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமியை நம்பவைத்து தனக்கு சாதகமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, 15 வயது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பாட்டி தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிக்கந்தர் ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.