அவரை வைத்து என்னால் படம் இயக்க முடியாது!!! பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் பேட்டி!!!

0
49
#image_title

அவரை வைத்து என்னால் படம் இயக்க முடியாது!!! பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் பேட்டி!!!

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் அவர்களை வைத்து திரைப்படம் இயக்குவீர்களா என்று கேட்ட கேள்வி ஒன்றுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் பதில் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் 2000ம் ஆண்டில் வெளியான ஹே ராம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன் அவர்கள் தனுஷ், விஜய், அஜித், விஜய் சேதுபதி, விஷால் ஆகியோருடன் நடித்துள்ளார்.

நடிகையாக மட்டுமில்லாமல் சில பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் பதில் அளித்து உள்ளார்.

அதாவது சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிஹாசன் அவர்களிடம் “நடிகர் கமல்ஹாசன் அவர்களை வைத்து திரைப்படம் இயக்குவீர்களா” என்று கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு நடிகையும் கமல்ஹாசன் அவர்களின் மகளுமான ஸ்ருதிஹாசன் அவர்கள் பதில் அளித்துள்ளார்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் “நடிகரும் என்னுடைய தந்தையுமான கமல்ஹாசன் அவர்களை வைத்து என்னால் படம் எல்லாம் இயக்க முடியாது. அவருடன் நான் மட்டுமல்ல. வேறு யாராலும் போட்டி போடவே முடியாது. அவருக்கு போட்டி அவர் மட்டும்தான்.

நான் அவருடைய வாரிசு தான். ஆனால் எனக்கு அரசியல் ஆர்வம் எதுவும் கிடையாது. நானும் என்னுடைய தந்தை கமல்ஹாசன் அவர்களும் சேர்ந்து உருவாக்கிய ஆல்பம் பாட்டு ஒன்று விரைவில் வெளியாகும்” என்று நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.