சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் இந்த கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்த நாள் சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் நல்லக்கண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடியை ஏற்றினார். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். அதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவிற்கு பிறந்தநாள் கூறினார். மேலும் அவர்க்கு பொன்னாடை அணிவித்து, திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கி கவுரவித்தார்.
நல்லக்கண்ணு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:
“நல்லக்கண்ணுவை வாழ்த்த வரவில்லை; அவரிடம் வாழ்த்து பெற வந்திருக்கிறேன். . பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு, நல்லக்கண்ணுவுக்கும் நூற்றாண்டு, இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைக்கவில்லை. எல்லாருக்கும் எல்லாம், சமூகநீதி – சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என பாடுபடுபவர் நல்லக்கண்ணு. அமைதியாக – ஆழமாக சிந்தித்து பேசக்கூடிவர் நல்லக்கண்ணு. திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக விளங்குபவர் நல்லக்கண்ணு”.
“திமுக ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கும் நல்லக்கண்ணு உறுதுணையாக விளங்கி கொண்டிருக்கிறார். எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என நல்லகண்ணு அய்யாவைக் கேட்டுக் கொள்கிறேன். 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறும் அளவுக்கு திமுக கூட்டணி அமைந்திருக்கிறது. கொள்கை கூட்டணியாக மட்டுமல்ல; மதச்சார்பின்மை கூட்டணி, நிரந்தர கூட்டணியாக இருக்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.