இந்திய அணியில் அனைத்து வகையான சர்வதேச போட்டியில் இருந்தும் விரிதிமான் சாஹா ஓய்வு அறிவித்தார். இதுகுறித்து கூறிய அவர் நான் அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ரஞ்சி தொடரில் விளையாட காரணம் கங்குலி மற்றும் எனது மனைவி கேட்டுகொண்டதால் தான் என்று அவர் கூறினார்.
இவர் இதுவரை IPL தொடரில் 17 சீசன்களில் விளையாடியுள்ளார். இதில் இவர் 5 அணிகளுக்காக விளையாடி மொத்தம் 2934 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் இவர் ரஞ்சி தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் நிலையில் இந்த ரஞ்சி தொடருடன் அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

இவர் 2014 ஆண்டு எம் எஸ் தோனியின் ஓய்விற்கு பின் அவருக்கு பதிலாக கொண்டுவரப்பட்டவர் விரிதிமான் சாஹா. ஆனால் உள்நாட்டில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் போன்ற விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ் மேன் வீரர்களின் சிறப்பான எழுச்சி காரணமாக இவர் கொஞ்சம் கொஞ்சமாக அணியில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
தற்போது 40 வயதாகும் இவர் அனைத்து வகையான போட்டிகளிலும் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். மேலும் வரவிருக்கும் IPL தொடருக்கான ஏலத்தில் பெயரை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.