எனக்கு விஸ்வாசம் படம் பிடிக்கவில்லை

Photo of author

By Parthipan K

எனக்கு விஸ்வாசம் படம் பிடிக்கவில்லை

Parthipan K

2019ஆம் ஆண்டில் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த ப்ளாக் பஸ்டர்  படம் விஸ்வாசம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மற்றும் வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படம்தான் அஜித் நடிப்பில் மாபெரும் வசூலை குவித்து படம் இப்படத்தின் தயாரிப்பாளர் சத்யா ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இப்படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய முன் வந்து கன்னட திரையுலக முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவராஜ் குமாரிடம் விஸ்வாசம் படத்தை போட்டு காட்டியுள்ளார். விஸ்வாசம் படத்தை பார்த்த நடிகர் சிவராஜ் குமார் ” படம் எனக்கு பிடிக்கவில்லை என்று  கூறியுள்ளாராம். இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் நான் வேறொரு கதையுடன் இயக்குனரை அனுப்பி வைக்கிறேன் என கூறிவிட்டராம்.