இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சங்கு பூ டீயில் இத்தனை நன்மைகளா?

இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சங்கு பூ டீயில் இத்தனை நன்மைகளா?

நமது முன்னோர்கள் உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழக்கத்தை பின்பற்றியவர்கள். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணத்தை அறிந்து அதனை உணவாக உட்கொண்டு வந்தனர். அந்த வகையில் பல பூக்களிலும் மருத்துவ குணங்கள் அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக செம்பருத்தி.

செம்பருத்தி இதழை நம் தினமும் உண்பதால் இதயத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இருப்பது சங்கு பூ, இதனை ஆங்கிலத்தில் பட்டர்பிளை பிளவர் என்றும் கூறுவர். சமீபகாலமாக இதனை மக்கள் தங்களின் நடைமுறை வாழ்க்கையில் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பூவை சிவபெருமானுக்கு அணிவித்து வழிபடுவர். சமீபகாலமாக மக்களிடையே சங்கு பூ தேனீர் பிரபலமடைந்து வருகிறது. இதில் அதிக ரீதியான மருத்துவ குணங்கள் உள்ளது. உடல் ஆரோக்கியம் மற்றும் அழகு ஆகியவற்றை மேன்மைப்படுத்த இந்த சங்கு தேநீர் எனப்படும் ப்ளூ டி யை மக்கள் குடித்து வருகின்றனர். இந்த சங்கு தேனீர் குடிப்பதால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் சங்கு டி குடித்துவர நல்ல பயன் பெற முடியும்.

மேலும் இந்த சங்கு தேநீரில் ஆன்தோசைன் எனப்படும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் உள்ளது. கண்ணில் ஏற்படும் விழித்திரை நீரிழிவு நோயை சரிசெய்ய அதிக அளவில் இது உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கண் பார்வை குறைவை நிரந்தரமாக சரிசெய்ய இந்த தேநீர் உதவுகிறது. மேலும் இது ஞாபகத் திறனை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். இந்த சங்கு தேநீர் குடிப்பதால் மனதில் ஏற்படும் அதிக கோபத்தை கட்டுப்படுத்த உதவும். மூளையில் இன்பத்திற்கான ஹார்மோன் சுரப்பிகள் ஆன செரோடோனின் ,ஆக்சிடோசின், என் ரோபின் போன்ற ஹார்மோன்களை இந்த சங்கு பூ தேநீர் அதிக அளவு சுரக்க உதவுகிறது.

இதனால் மனக் கவலைகள் இன்றி இருக்க இது பெரும் உதவியாக உள்ளது. அதுமட்டுமின்றி இந்த தேநீர் புற்றுநோய் வருவதையும் தடுக்க உதவுகிறது. உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் இந்த சங்கு பூ தேனீர் தினந்தோறும் குடித்து வருவதன் மூலம் விரைவில் உடல் எடையைக் குறைக்க முடியும். இதயத்தில் உண்டாகும் மாரடைப்பை தடுக்க இந்த சங்கு பூவில் அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. தோல் சார்ந்த பிரச்சனைகளான வறண்ட சர்மம் அரிப்பு ,முக சுருக்கம் போன்றவைக்கு இந்த சங்கு பூ தேநீர் மிகவும் நன்மையைத் தரும். முடி உதிர்வைத் தடுக்கவும் இது உதவும். இந்த ஒரு பூவில் இத்தனை பயன்கள் இருப்பதால் வாரம் இருமுறையாவது மக்கள் இதனை தேநீராக எடுத்துக் கொள்ளலாம்.

Leave a Comment