சினிமா வேண்டாம் அரசியலுக்கு வரேன்.. கமல் விஜய் க்கு டப் கொடுக்கப்போகும் சூர்யா!! 

0
247
I don't want cinema, I will come to politics.. Suriya is going to give dub to Kamal Vijay!!
I don't want cinema, I will come to politics.. Suriya is going to give dub to Kamal Vijay!!

 

சினிமா வேண்டாம் அரசியலுக்கு வரேன்.. கமல் விஜய் க்கு டப் கொடுக்கப்போகும் சூர்யா!!

சினிமா பிரபலத்தை சேர்ந்தவர்கள் தான் அரசியலில் நுழைந்து தற்பொழுது பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கி வைத்துள்ளனர்.அந்த வகையில் எம்ஜிஆர் முதல் கருணாநிதி வரை ஏன் ஜெயலலிதா உட்பட அனைவரும் அதன் வழி வந்தவர்கள் தான்.இவை அனைத்தும் நாம் அறிந்த ஒன்று.அந்த கதையின் தொடக்கமாக தற்பொழுது வரை பல திரை பிரபலங்கள் அரசியலுக்குள் வந்து நாளடைவில் பின்தங்கியும் விடுகின்றனர்.இதற்கு நல்ல உதாரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூட கூறலாம்.

பலமுறை அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு சில பல காரணங்களால் அப்படியே பின்தங்கி விட்டார்.இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கமலஹாசன் சட்டமன்றத் தேர்தல் மக்களவைத் தேர்தல் என அனைத்தையும் களம் கண்டுவிட்டார்.இவரைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய்யும் அரசியலில் நுழைந்து களம் காண உள்ளார்.வரப்போகும் சட்டமன்ற தர்தலானது திரையுலகில் யார் பலம் உள்ளவர்கள் என்பதை இதை வைத்து கூட அறிந்து கொள்ளலாம்.

கமலஹாசன் என தொடங்கி உதயநிதி, நடிகர் விஜய் என அனைவரும் நேருக்கு நேர் மோத உள்ளனர்.இந்த போட்டியில் தற்பொழுது நடிகர் சூர்யாவும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எப்படி விஜய், ரசிகர்கள் மன்றம் மூலம் அரசியலில் நுழைந்தாரோ அதேபோல சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகளும் வரப்போகும் ஊராட்சி மன்ற தேர்தலில் இவருடைய புகைப்படம் வைத்து போட்டியிட அவரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.

முதலில் இந்த அரசியலெல்லாம் வேண்டாமென்று திட்டவட்டமாக மறுத்த சூர்யா, இதன் மூலம் பலருக்கும் உதவி செய்ய முடியும் என்று கூறியதால் ஒப்பு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.இதற்கு முன்னதாகவே பல ஆண்டு காலமாக சூர்யா தலைமையில் அகரம் பவுண்டேஷன் செயல்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.இந்த ஊராட்சி மன்ற தேர்தலில் ரசிகர் மன்றம் சார்பாக இவர் புகைப்படம் வைத்து போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல இவர் அரசியலுக்கு வருவது உறுதியானால் தமிழகத்தில் நட்சத்திர நடிகர்களின் போட்டியானது களைக்கட்ட கூடும்.குறிப்பாக சூர்யா தீவீர கமலஹாசன் ரசிகர்,அவரை எதிர்த்து எப்படி போட்டியிடுவார் என்று பலரது கேள்விகளும் இருந்து வருகிறது.