துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை-மதிமுக அவை தலைவர் துரைசாமி!

0
193
#image_title

துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை அவரை நான் மதிக்கவே இல்லை என ஆலோசனையில் ஈடுபட்ட மதிமுக அவை தலைவர் துரைசாமி பேச்சு.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் எதை முன்னிருத்தி துவங்கியதோ அதன் நிலை மறந்து சந்தர்ப்பவாத அரசியல் நடைபெறுவதாகவும், சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு தாங்களும் அப்பாற்பட்டவர்கள் அல்ல.

கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை தாய்க் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது.

என மதிமுக அவைத்தலைவர் துரைசாமி வைகோவிற்கு கடிதம் எழுதியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் திருப்பூரில் உள்ள மதிமுக அவை தலைவர் துரைசாமி இல்லத்தில் அவர் ஆதரவாளர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது துரைசாமி எதிர்கால நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்கள் இது குறித்து கேட்டபோது திமுகவிலிருந்து மதிமுக பிரிந்து வந்த போது மதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ள வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்ததாகவும், அவரது பேச்சை நம்பி 30 ஆண்டுகளுக்கு மேலாக மதிமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் தற்போது புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

உட்கட்சி தேர்தலில் துரை வைகோவிற்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார் .

மேலும் துரை வைகோ சிலரின் தூண்டுதலின் பெயரில் அவைத்தலைவர் துரைசாமி இது போன்று கருத்து தெரிவித்து வருவதாக எழுதிய கேள்விக்கு துரை வைகோவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை எனவும் அவரை நான் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோவிற்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் அவரின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் அவரின் கருத்துக்கு தான் பதில் சொல்வேன் எனவும் தெரிவித்தார்.

‌தொடர்ந்து ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் அவர் இன்னும் ஒரு சில தினங்களில் வைகோவிடமிருந்து பதில் வரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Previous articleமல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பின்னால் காங்கிரஸ் உள்ளது!
Next articleநில ஆக்கிரமிப்பு விதிகளை பின்பற்றாத தாசில்தாருக்கு 10,000 ரூபாய் அபராதம்-உயர் நீதிமன்ற உத்தரவு!