காசு வாங்கிவிட்டேன்.. வரம்பு மீறிய டைரக்டர்!!  கதறும் தல தளபதி ஹீரோயின்!!

0
188
I have bought money.. director who exceeded the limit!! Screaming Head Commander Heroine!!
I have bought money.. director who exceeded the limit!! Screaming Head Commander Heroine!!

 

 

 

காசு வாங்கிவிட்டேன்.. வரம்பு மீறிய டைரக்டர்!!  கதறும் தல தளபதி ஹீரோயின்!!

நடிகை மந்த்ரா அவர்கள் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் பிறந்து வளர்ந்தவர் இவருடைய இயற்பெயர் ராசி ஆகும். இவர் தன் 9 வயதில் குழந்தை நட்சத்திரமாக மமதலா கோவெல்லா என்னும் தெலுங்கு படத்தில் 1989ம் ஆண்டு அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தார். அவர் தமிழில் முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் ப்ரியம் இதில் அவர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.

அதன் பின் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருடனும் இணைந்து நடித்துள்ளார். அதே நேரத்தில் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மற்றும் ஹிந்தி மொழியிலும் மூன்று படங்களில் நடித்துள்ளார்.

 

#image_title

இவர் தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் சிம்பு நடிப்பில் வெளிவந்த வாலு மற்றும் ஜீவா நடிப்பில் கவலை வேண்டாம் போன்ற படங்களில் சிறிய தோற்றத்தில் நடித்திருப்பார். அப்படி இருக்கையில் தன்னுடைய சினிமா வாய்ப்பு குறைந்ததற்கான காரணத்தை மந்த்ரா அவர்கள் கூறியுள்ளார்.

இவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு தெங்லுகு பட வாய்ப்புகள் அதிகமாக வந்தது. அப்படி இருக்கையில் தெலுங்கில் பிரபல இயக்குனர் தேஜா அவர்கள் இயக்கத்தில் நிஜம் என்ற திரைப்படத்தில் கோபிசந்த்-கு இணையாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான முன்பணமும் பெற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் இயக்குனர் சொன்ன கதை பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புகொண்டார், அதன் பின் காட்சியமைப்பு செய்யும் போது வரம்பு மீறிய காட்சிகள் இருந்ததாகவும் தன்னை படுகவர்ச்சியாகவும் நடிக்கவும் சொன்னார். அது தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது வருத்தமாகவும் இருந்தது. முன்பணம் பெற்று கொண்ட காரணத்தினால்தான் தான் நடித்ததாக கூறினார்.

அதன் பின்தான் தனக்கான சினிமா வாய்ப்பு குறைந்ததாகவும் தான் கேரக்டர் ரோலில் நடித்திருந்தால் நல்ல பட வாய்ப்புகள் கிடைத்திருக்குமென்றும் ஒரு நேர்காணலில் புலம்பினார்.