அவரை மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததே இல்லை – விஜயகாந்த் குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!

Photo of author

By Gayathri

அவரை மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததே இல்லை – விஜயகாந்த் குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!

Gayathri

Updated on:

அவரை மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததே இல்லை – விஜயகாந்த் குறித்து மனம் திறந்த அருண் பாண்டியன்!

விஜயகாந்த் மாதிரி ஒரு நேர்மையான ஆளை நான் பார்த்ததே இல்லை என்று நடிகர் அருண் பாண்டியன் மனம் திறந்து பேசியுள்ளார்.

அருண் பாண்டியன் – Arun Pandian

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். இவரின் தந்தை முன்னாள் இராணுவ வீரர்.2011ம் ஆண்டு பேராவூரணி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பணியாற்றினார். மேலும், இவர் தென்னிந்திய திரைப்பட நிதியாளர்கள் சங்கத்தின் செயலாளராகவும், தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணிபுரிந்தார்.

அருண் பாண்டியன் 2011ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளராக பேராவூரணி தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, 2016ம் ஆண்டு அருண் பாண்டியன் தன் பதவியை ராஜினாமா செய்ததனர். இதன் பின்னர், 2016ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

இந்நிலையில் நடிகர் அருண் பாண்டியன் ஒரு சேனலுக்கு பேட்டிகொடுத்தார். அந்த பேட்டியில் கேப்டன் விஜயகாந்த்தை குறித்து மனம் திறந்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

விஜயகாந்த் – Vijayakanth

விஜயகாந்த்துக்கிட்ட கத்துக்க வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்றுதான். நேர்மைதான். ரொம்ப நேர்மை இருப்பார். நிறைய பேரை பணம் தொந்தரவு செய்துவிடும். பணம் ஒருவருடைய குணத்தை மாற்றும். நிறைய பேருக்கு பதவி குணத்தை மாற்றும். நிறைய பேருக்கு புகழ் குணத்தை மாற்றும். சூழ்நிலை மட்டும்தான் அவரை கொஞ்சம் மாற்றியது. அவரை போல் நல்லவர் நான் சினிமாவில் பார்த்ததே இல்லை. இனிமேலும் பார்க்கப்போறதும் கிடையாது.

இதை உறுதியாய் நான் எங்க வேண்டுமானாலும் சொல்வேன். அவருடைய கட்சியிலிருந்து நான் வெளியே வரும்போது, அவரிடம் சொல்லிவிட்டு வந்த ஒரே ஆள் நான்தான். அதற்கான காரணத்தை சொல்லிவிட்டு வந்த ஒரே நாள் நான்தான். என் அன்பா கூப்பிடுவாரு. என் மேல் எவ்வளவு அன்பு வைத்திருப்பார்ன்னு எனக்கு தெரியும் என்று பேசினார்.