செஸ் விளையாட்டிற்காக நான் தியாகம் செய்தது ஏராளம்! இது எனது பயணத்தின் ஆரம்பமே – கேண்டிடேட் செஸ் சாம்பியன் குகேஷ் பேட்டி!
தமிழகத்தில் கிரிக்கெட்,கால்பந்து,கபடி போன்று செஸ் விளையாட்டிலும் இளைய தலைமுறையினரிடம் ஆர்வம் அதிகரித்து வருகின்றது.இந்தியாவில் செஸ் என்றால் விஸ்வநாதன் ஆனந்த் மட்டும் தான் என்ற நிலை மாறி இருக்கிறது.இன்று குகேஷ்,பிரக்ஞானந்தா,வைஷாலி போன்ற பல இளம் கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி விட்டனர்.செஸ் மீதான இவர்களின் ஆர்வம் மற்றவர்களை செஸ் விளையாட ஊக்குவிக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் கனடாவின் டொரொண்டோவில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் அவர்கள் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி இருக்கிறார்.17 வயதாகும் குகேஷ் இளம் வயதிலேயே கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டம் வென்று இருப்பது மூத்த செஸ் வீரர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
குகேஷ் சிறு வயதில் இருந்தே செஸ் விளையாடி வருகிறார்.தனது 12 வயதில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையை புரிந்தார்.உலகின் நம்பர் 01 செஸ் சாம்பியனான மேக்னஸ் கால்சனை வீழ்த்தி அசத்தினார்.
தற்பொழுது கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவை பெருமைப்படுத்தி இருக்கிறார்.கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் தற்பொழுது நாடு திரும்பி இருக்கும் நிலையில் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டு வருகிறது.
குகேஷ் பேட்டியில் கூறியிருப்பது:-
எனக்கு சிறு வயதில் செஸ் மீது அதிக ஆர்வம் இருந்தது.பள்ளியில் படிக்கும் பொழுது தான் செஸ் விளையாட ஆரம்பித்தேன்.தற்பொழுது கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்று இருப்பது தன்னுடைய விடாமுயற்சிக்கு கிடைத்த பலன்.இங்கு இருந்து தான் என் பயணம் ஆரம்பமாகிறது.செஸ் விளையாட்டில் நான் இன்னும் சாதிக்க வேண்டியது அதிகம்.
செஸ் விளையாட்டிற்காக நான் தியாகம் செய்தது ஏராளம்.அதற்கான வெற்றி தான் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டம் என்று பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான போட்டியில் டிங் லிரனுடன் குகேஷ் மோத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.