கருங்காலி மாலை தெரியும்.. அது என்ன ‘செங்காலி மாலை’? அடடே இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

0
181
#image_title

கருங்காலி மாலை தெரியும்.. அது என்ன ‘செங்காலி மாலை’? அடடே இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

தற்பொழுது ட்ரெண்டிங்கில் இருப்பது கருங்காலி மாலை தான். திரை பிரபலங்கள் பலர் இதை அணியத் தொடங்கியதால் பேமஸான ஒன்றாக மாறிவிட்டது. சிலர் இதை கண் திருஷ்டியை தடுப்பதற்காக அணிந்திருக்கின்றனர். சிலர் பேஷனுக்காக அணிந்திருக்கின்றனர்.

தற்பொழுது இந்த கருங்காலி மாலை விற்பனை சூடுபிடித்திருக்கும் நிலையில் சிலர் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு போலி கருங்காலி மாலையை விற்று வருகின்றனர். இதை அறியாத பலர் போலியை வாங்கி அணிவதால் எந்த பயனும் இல்லாமல் போய்விடுகிறது. இந்த மாலையை நம்பகத் தன்மை உள்ள இடங்களில் வாங்கி அணிவது நல்லது.

கருங்காலி மரத்திற்கு ,மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகமாகவே இருக்கிறது. இந்த மரத்தின் துண்டுகளை கோயில் கும்பாபிஷேகத்தில் கலசத்தை நிலை நிறுத்த பயன்படுத்துவதை பார்த்திருப்போம்.

கருங்காலி மரத்தின் வேர், பட்டை போன்றவை அதிக மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. கருங்காலி மரத்தின் பட்டைகளை அரைத்து சாப்பிட்டால் இரத்தம் தொடர்பான நோய் பாதிப்புகள் குணமாகும்.

கருங்காலி வேர் நீரானது வயிற்று வலி, சர்க்கரை நோய், சோர்வு போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

இப்படி கருங்காலி மாலை மற்றும் அதன் பயன்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும் நிலையில் தற்பொழுது செங்காலி மாலை புதிதாக ட்ரெண்டாகி வருகிறது. இந்த செங்காலி மரமும் கருங்காலி மரத்தைப் போல் அனைத்து பண்புகளையும் ஒத்திருக்கிறது. இந்த மரத்திற்கு தெய்வீக சக்தி அதிகளவில் உண்டு. இவை தேக்கு மரத்தை விட வலிமையாவை.

கருங்காலி மாலை கண் திருஷ்டியில் காக்கும் என்றால் செங்காலி மாலை பிரபஞ்ச சக்தியிலிருந்து நமக்கு நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

செங்காலி மரத்தை வீட்டில் வளர்த்தால் கெட்ட சக்திகள் அண்டாது. செங்காலி மாலை அணிபவர்களுக்கு தெய்வாம்சம் நிறைந்திருக்கும். கோயில் கட்டுமானத்திற்கு செங்காலி மரத்தை உபயோகிப்பதை நாம் பார்த்திருப்போம்.

செங்காலியை பயன்படுத்தினால் முகம் பொலிவடையும். அந்த காலத்தில் அரசர்கள் செங்காலி மாலைகள் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதிலும் மின்காந்த ஆற்றலை உறிஞ்சும் சக்தி இந்த மாலைக்கு இருக்கிறது.

இந்த செங்காலி மாலை வேலை கிடைக்காதவர்களுக்கும், சுப காரிய தடை உள்ளவர்களுக்கும் நல்ல பலனைத் தருகிறது. அதேபோல் கார்களில் செங்காலி மாலை வைத்திருந்தால் விபத்து ஏற்படாது.

மேஷம், விருச்சிகம் ராசிக்காரர்கள் மற்றும் கிருத்திகை, விசாகம், திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செங்காலி மாலை, வளையல், பிரேஸ்லெட் போன்றவற்றை அணிந்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

செங்காலி பிரேஸ்லெட்டை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணியலாம். அசைவ உணவுகளை உண்ணும் பொழுது மட்டும் இந்த செங்காலி மாலை, பிரேஸ்லெட், வளையல் உள்ளிட்டவற்றை கழட்டிவிட வைக்கவும். இந்த பெங்காலி மாலை முருகனுக்கும், பைரவருக்கும் உகந்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.