தேன் நெல்லி தெரியும்.. அது என்ன உப்பு நெல்லி? அடடே இதில் இவ்வளவு விஷயம் அடங்கியிருக்கா?

Photo of author

By Divya

தேன் நெல்லி தெரியும்.. அது என்ன உப்பு நெல்லி? அடடே இதில் இவ்வளவு விஷயம் அடங்கியிருக்கா?

Divya

உடல் ஆரோக்கியத்தை காக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றான நெல்லிக்காய் அதிக மருத்துவ பண்புகளை கொண்டிருக்கிறது.இந்த நெல்லிக்காயில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல அற்புத நன்மைகளை வழங்குகிறது.

நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

*கால்சியம் *வைட்டமின் சி *பொட்டாசியம் *இரும்பு *பிளவனாய்டுகள் *ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்

உப்பு சேர்த்த நெல்லியின் மருத்துவ பயன்கள்:

1)உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க உப்பு சேர்த்த நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த இந்த பெரிய நெல்லிக்காய் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

2)உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் குறைய நெல்லிக்காயில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம்.

3)இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டால் அதை குறைக்க நெல்லிக்காயில் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

4)செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் உப்பு சேர்த்த நெல்லிக்காய் துண்டுகளை தினமும் சாப்பிட்டு வரலாம்.

5)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உப்பு சேர்த்த நெல்லிகாய் சாப்பிடலாம்.நெல்லியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் இம்யூனிட்டி பவரை அதிகரிக்க உதவுகிறது.

6)சரும பாதிபேய்கள் அனைத்தும் குணமாக நெல்லிக்காயை உப்பில் ஊறவைத்து சாப்பிட்டு வரலாம்.

7)முடி வளர்ச்சியை அதிகரிக்க உப்பு சேர்த்த நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.நெல்லியில் குறைவான அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் குறியீடு இருக்கிறது.இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

உப்பு நெல்லிக்காய் செய்வது எப்படி?

தேவைப்படும் பொருட்கள்:

1)பெரிய நெல்லிக்காய் – 1/4 கிலோ
2)உப்பு – இரண்டு தேக்கரண்டி
3)கருப்பு மிளகு – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

முதலில் பெரிய நெல்லிக்காயை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு ஈரமில்லாத பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.நெல்லி விதைகளை மட்டும் அப்புறப்படுத்திவிட வேண்டும்.

அடுத்து நெல்லித் துண்டில் இரண்டு தேக்கரண்டி தூள் உப்பு சேர்த்து கலந்துவிட வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து கலந்து வெயிலில் காயவைத்தால் உப்பு நெல்லிக்காய் ரெடி.