முழுமையாக உடல் தகுதி பெறாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்

Photo of author

By Parthipan K

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியான கிராண்ட்ஸ்லாம் என்ற அந்தஸ்து பெற்ற போட்டி நியூயார்க்கில் இந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13-ந் தேதி  முடிவடைகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. 2019 ல் கனடா வீராங்கனையான பியான்கா ஆன்ட்ரீஸ் செரீனா வில்லியம்சை வீழ்த்தி அமெரிக்க ஓபன் டென்னிஸில் மகுடம் சூடினார் ஆனால் இந்த முறை திடீரென போட்டியில் இருந்து விலகினார்.
தனக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். தற்போது முழு உடல் தகுதியை பெறாததால் இந்த முடிவை எடுத்துள்ளார். தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் இவர் அமெரிக்க ஓபனை தவற விடுவது மிகவும் கடினமானது என்று கூறினார். அதேபோல ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் கொரோனா அச்சத்தால் விலகி விட்டார்.
.