2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி இப்போதே எல்லா கட்சிகளும் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் ஆட்சியை பிடிக்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே இப்போதிருந்தே தங்களின் அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துவிட்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி மக்களை நேரில் சந்தித்து மக்களின்குறைகளை கேட்டறிந்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார். விஜய், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை தங்களின் கூட்டணிக்குள் கொண்டுவர அனுதினமும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக கூட்டணிக்கு வருபவர்களை ரத்தினக்கம்பளம் கொண்டு வரவேற்போம் என்றும் அனுதினமும் எடப்பாடி ஆசை வார்த்தைகளை அள்ளித் தெளித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வந்தால் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி தருவேன் என்றும், நீங்கள் நினைப்பதை விட அதிக தொகுதிகள் கொடுப்போம் என்றும் எடப்பாடி சொன்னதாக திருமா அண்மையில் பேட்டி கொடுத்தார்.
ஆனால் இதுவரை விசிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை செய்யவில்லை என்றும், துணை முதல்வர் பதவி அதிக சீட்டுகள் தருகிறேன் என்று நான் சொல்லவில்லை எனவும் எடப்பாடி மறுப்பு தெரிவித்துள்ளார். எடப்பாடி சொல்லாத ஒருவிஷயத்தை ஏன் சொன்னதாக இப்படி திருமா பொது இடங்களில் பொய் பேசி திரிகிறார் என மக்கள் சமூக வலைத்தளங்களில் திருமாவளவனை வறுத்தெடுத்து வருகின்றனர்.