பாஜக கட்சியில் இருந்து விலகுகின்றேன்!!! பிரபல நடிகை கௌதமி அறிவிப்பு!!!

0
328
#image_title

பாஜக கட்சியில் இருந்து விலகுகின்றேன்!!! பிரபல நடிகை கௌதமி அறிவிப்பு!!!

பிரபல நடிகையும் பாஜக கட்சியின். நிர்வாகியுமான கௌதமி அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக தற்பொழுது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 1988ம் ஆண்டு வெளியான குரு சிஷ்யன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக கௌதமி அவர்கள் அறிமுகமானார். இதையடுத்து எங்க ஊரு காவல்காரன், புதிய வானம், அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, ஜென்டில்மேன் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நடிகை கௌதமி அவர்கள் தெலுங்கு, ஹிந்தி, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகை கௌதமி தற்பொழுது துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பிரபல நடிகையாக வலம் வந்த கைதாக அவர்கள் மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக கட்சியில் இணைந்து பல முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

அண்மையில் தன்னுடைய 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ஒருவர் ஏமாற்றி விட்டதாக கமிஷனர் அலுவலகத்தில் நடிகை கௌதமி அவர்கள் புகார் அளித்தார். இந்நிலையில் தற்பொழுது பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அதிரடிராக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகை கௌதமி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் “நான் பாஜக கட்சியில் 25 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். ஆனால் பாஜக கட்சி எனக்கு துணையாக நிற்கவில்லை. மிகுந்த மன வேதனையுடன் நான் பாஜக கட்சியில் இருந்து விலகுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Previous articleலியோ திரைப்படத்தின் நான்காவது நாள் வசூல்!!! இப்படியே சென்றால் 1000 கோடி கன்பார்ம்!!!
Next articleஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உள்பட 4 பதக்கங்கள்!!! தமிழக வீரர் மாரியப்பன் வெள்ளி வென்றார்!!!