இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான இரண்டாவது போட்டிக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே எல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இந்த இணை இதுவரை இல்லாத அளவுக்கு 200க்கும் மேல் ரன் குவித்து சாதனை படைத்தது. அதனால் இந்த இணை தான் இரண்டாவது போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை பற்றி மனம் திறந்துள்ளார் கே எல் ராகுல் அவர் கூறுகையில் நான் இதற்கு முன் ஜெயஷ்வால் உடன் விளையாடியதில்லை இதுவே முதல் முறை. அவருடன் விளையாடும்போது 10 வருடத்திற்கு முன் நான் எப்படி இருந்தேன் என எனக்கு நினைவுபடுத்தியது. அதுமட்டுமல்லாமல் அவரை நான் களத்தில் நான் அமைதி படுத்த முயற்சித்தேன்.
நான் பிங்க் பாலில் விளையாடுவது இதுவே முதல் முறை ரெட் பாலிற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. எதிர்கொள்வது வித்தியாசமாக உள்ளது. பந்து வீசும் போது கணிக்க முடியவில்லை அதனால் பயிற்ச்சியில் கவனமாக இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.