என்னுடைய படத்தின் டிக்கெட்டை நானே விற்றேன்

Photo of author

By Parthipan K

தனுஷ் சினிமா துறையில் தற்போது நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஆனால் ஆரம்பத்தில் பல மோசமான விமர்சனங்களையும் மற்றும் பல அவமானங்களையும் கடந்து வந்தார். இவருக்கு தனது சினிமா பயணத்தில் பொல்லாதவன் படம் திருப்பு முனையாக அமைந்தது. அந்த படத்தில் பிக்பாஸ் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் சென்ராயன். அதில் நான் அப்பா ஆகிட்டேன் என அவர் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை யாராலும் மறந்திருக்க முடியாது.

அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது, குழந்தைக்கு செம்பியன் என்றும் பெயர் வைத்துள்ளார். பொல்லாதவன் படம் ரிலீஸின் போது அவருடைய நண்பர் டிக்கெட்டை என்னிடம் கொடுத்து நீ உன் நண்பர்களுடன் படம் பார்கும்படி கூறினார். நண்பர்களுக்கு கொடுத்தது போக மீதி இருந்து டிக்கெட்டை பிளாக்கில் விற்றேன் நான் நடித்த படத்தின் டிக்கெட்டை நானே விற்றது பெருமையாக இருந்தது என கூறியுள்ளார்.