பலருக்கு பணத்தை சேமிப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன. அதாவது பணத்தை சேமிக்கும் பொழுது தங்களுடைய கையில் இருப்பு குறைந்து விடுகிறது. இதனால் திடீரென ஏற்படக்கூடிய பண தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். அவர்களுக்காகவே தபால் நிலையத்தில் மாதாந்திர வருமான திட்டமானது உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பணத்தை சேமிக்க நினைப்பவர்கள் அதற்கான வட்டி விகிதம் எவ்வளவு வருகிறது என்பதை கணக்கிட்டு பார்த்த பின்னரே அது வங்கியாக இருந்தாலும் அல்லது தபால் நிலையமாக இருந்தாலும் சேமிப்பை தொடங்குகின்றனர். பொதுவாக வங்கிகளை கருத்தில் கொள்ளும் பொழுது வங்கிகளை விட தபால் நிலையத்தில் வட்டி அதிகம் கிடைப்பதால் தற்பொழுது அதிகளவு மக்கள் தபால் நிலையங்களில் உள்ள திட்டங்களில் இணைந்து பயன் பெற்று வருகின்றனர். தபால் நிலையத்தில் 5 ஆண்டுகள் சேமிப்பு திட்டங்கள் நிறைய உள்ளன. அவற்றில் ஒன்றுதான் மாதாந்திர வருமான திட்டம்.
இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் முதல் 9 லட்சம் ரூபாய் வரை நம்முடைய டெபாசிட் பணத்தை வங்கி கணக்கில் செலுத்திக்கொள்ள முடியும். இந்த பணமானது நம் கைக்கு மீண்டும் வருவதற்கு 5 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்த 5 ஆண்டுகளில் இதற்கான வட்டியானது ஒவ்வொரு மாதமும் நம்முடைய வங்கி கணக்கில் வந்து சேரும் அப்படி கணக்கிட்டு பார்க்கும் பொழுது நாம் டெபாசிட் செய்த 9 லட்சம் ரூபாய்க்கு 3,33,000 வட்டியாக நமக்கு கிடைக்கிறது. இதற்கான வட்டி விகிதம் ஒவ்வொரு வருடத்திற்கும் 7.4% ஆக இருக்கிறது.
இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் பணத்தை ஒரு புறம் சேமிக்கவும் அந்த பணத்தின் மூலம் வரக்கூடிய வட்டியானது நம் வாழ்வில் ஏற்படக்கூடிய திடீர் பண தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முக்கிய வாய்ப்பாகவும் அமைகிறது.