தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வரும் ஜான் பாண்டியனின் அரசியல் பயணம் என்பது பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து தான் ஆரம்பமானது என்று கடந்த கால நினைவுகளை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார்.
இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவருடைய வலப்பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தில் முக்கியத் தலைவராக இருந்து வரும் ஜான் பாண்டியனின் அரசியல் பயணம் என்பது பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து தான் ஆரம்பமானது. 1989 ஆம் வருடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்த சமயத்தில் அவர் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். தமிழகம் முழுவதிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையை மக்களிடம் எடுத்துரைத்து இருக்கின்றார்.
பாமக கடந்த 1989ஆம் வருடம் ஜூலை மாதம் 16ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில், அந்த வருடம் நவம்பர் மாதத்திலேயே நடைபெற்ற மக்களவை தேர்தல் தான் பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்த முதல் தேர்தல் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக ஜான்பாண்டியன் அந்த தேர்தலில் அவர் 83 ஆயிரத்து 933 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்ததாக தெரிவிக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
1991-ஆம் வருடம் பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில் ஜான்பாண்டியன் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் அவர் 29 ஆயிரத்து 21 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். திமுக கூட்டணி வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இவையெல்லாம் தவிர்த்து அதற்கும் மேலாக சொல்லவேண்டுமென்றால், ஜான்பாண்டியன் திருமணத்தை நடத்தி வைத்தது நான்தான் என்று உணர்ச்சி பொங்க தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.