ஜெயலலிதா மரணம் குறித்து சர்ச்சையை கிளப்பிய கடம்பூர் ராஜு!

0
69

ஜெயலலிதா இயற்கையாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றார். அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர் உயிருடன் திரும்பி வரவில்லை என்று தெரிவித்திருக்கின்றார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 2021 23 ஆம் வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சென்னை வடபழனியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அதில் உரையாற்றிய அவர் நடிகர் சங்கத் தேர்தல் முடியாமல் இருப்பது வருத்தத்தை தருகின்றன. அது எந்தவித இடையூறும் இல்லாமல் நடந்து முடிந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் பெப்சி பணியாளர்கள் எந்த நேரம் எந்த கோரிக்கை வைத்தாலும் முதல்வரை உடனடியாக சந்தித்ததன் மூலமாக அவர் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்து இருக்கின்றார்.சினிமா என்றால் செல்வம் சேரும் துறை என்று நான் நினைத்திருந்த என்னுடைய எண்ணத்தை மாற்றியது பெப்சி பணியாளர்கள் வாழ்வாதார நிலை. கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார்.

இயற்கையாக உடல் நிலை பாதிக்கப்பட்டு ஜெயலலிதா மருத்துவமனைக்கு சென்றார். அவர் உடல் நலம் பெற்று திரும்பி வந்துவிடுவார் என்று நினைத்தோம் ஆனால் அவர் உயிருடன் திரும்பி வரவில்லை. அவருடைய ஆசை என்னவென்றால் என்னுடைய தலைமையில் மிகப் பிரம்மாண்டமான சினிமாத்துறை நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்பதுதான் திருச்சியில் தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் கட்டும் வேலைகள் விரைவில் முடிவடைய இருக்கிறது. சில தினங்களில் முதலமைச்சர் தலைமையில் அந்த மண்டபத்தின் திறப்பு விழா நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் புதிய திரைப்படங்கள் இணையதளத்தில் வெளிவந்தது. அதுகுறித்து உண்டான பிரச்சனையை தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோர் ஒன்று கூடி பேசி முடிவு எடுக்க வேண்டும் தமிழக அரசு உங்களுக்கு எப்போதும் துணை நிற்கும் என்று பேசி இருக்கின்றார்.