’என் உடலை தானம் செய்கிறேன்’..!! ’இதயத்தை மட்டும் அவர்களிடம் கொடுத்து விடுங்கள்’..!! உருக்கமாக பதிவிட்ட நடிகர் ஷிஹான் ஹுசைனி..!!

Photo of author

By Vinoth

’என் உடலை தானம் செய்கிறேன்’..!! ’இதயத்தை மட்டும் அவர்களிடம் கொடுத்து விடுங்கள்’..!! உருக்கமாக பதிவிட்ட நடிகர் ஷிஹான் ஹுசைனி..!!

Vinoth

மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு எனது உடலை தானம் செய்வதாக நடிகர் ஷிஹான் ஹுசைனி அறிவித்துள்ளார்.

கடந்த 1986ஆம் ஆண்டு பாலச்சந்தரின் ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்  ஷிஹான் ஹுசைனி. இவர், கராத்தே மாஸ்டராக வலம் வந்த நிலையில், நடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தின் மூலம் தான் இவர் பெரியளவில் அறியப்பட்டார். இதுவரை இவர், சுமார் 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.

இந்நிலையில் தான், தனக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பதாகவும், நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் தேவைப்படுவதாகவும் ஷிஹான் ஹுசைனி கூறியிருந்தார். மேலும், இந்த புற்றுநோயில் இருந்து மீண்டு வருவேன் என்றும் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் பேசியிருந்தார். இது திரையுலகினர் மற்றும் அவரது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஷிஹான் ஹுசைனி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக எனது உடலை தானம் செய்கிறேன். நான் இறந்த 3 நாள்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு என் உடலை தானம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளார். மேலும், இக்கல்லூரியின் நிறுவனர் ஸ்ரீ ராமசாமி உடையார், எனது இந்திய கராத்தே சங்கத்தின் தலைவராக இருந்தவர்.  எனது ‘Snake Bite World Record’ நிகழ்வுக்கும் தலைமை தாங்கியவர்.

என் இதயத்தை மட்டும் பாதுகாப்பதற்காக, என் வில்வித்தை மற்றும் கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இதைப் படிக்கும் கல்லூரியின் அதிகாரி உடனே வந்து, என்னுடைய அதிகாரப்பூர்வ ஒப்புதலையும், எனது கையொப்பத்தையும் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.