இனி லவ் ஸ்டோரியில் நடிக்க மாட்டேன்!! தனுஷின் இந்த முடிவுக்கு காரணம் என்ன!!

0
35
I will not act in love story again!! What is the reason for Dhanush's decision!!
I will not act in love story again!! What is the reason for Dhanush's decision!!

இனி லவ் ஸ்டோரியில் நடிக்க மாட்டேன்!! தனுஷின் இந்த முடிவுக்கு காரணம் என்ன!!

நடிகர் தனுஷ்  திரைத்துறையின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில்  எதார்த்தமான முகம், மெல்லிய உடல் தோற்றத்துடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிபடுத்தினார்.

யாரும் எதிர்பாராத வேடங்களில் எல்லாம் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தி பல கோடிக்கணக்கான ரசிகர்களை தனது வசம் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் தனது புகழ் பெற்று இருந்தார் பின்பு அதனை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்துகிறார்.

இவர் திரைப்பட நடிகராக தனது பயணத்தை தொடங்கி தற்பொழுது பாடகர் ,பாடலாசிரியர் ,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றார்.

தனுஷ் ஆடுகளம் படத்தின் மூலம் தான் மிகவும் பிரபலம் ஆனார்.அதன்பின்பு அவரின் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது.

அந்த வகையில் பரத் பாலா அவர்களின் இயக்கத்தில் மரியான் தனுஷ் மரியான் என்னும் படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் அவர் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது சமூக வலைத்தளத்தில் தனுஷ் ,ஏஆர் ரகுமான் இருவரும் பேசி கொண்டிருத்தனர்.அப்பொழுது அவர் மரியான் படம் போன்று காதல் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினார்.

அதற்கு தனுஷ் அவர்கள் சிரித்து கொண்டே எனக்கு  40 வயது ஆகி விட்டது என்றும் காதல் படம் எதுவும் எனக்கு சரியாக இருக்காது என்றும் கூறினார்.

இப்பொழுது தனுஷ்  நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் வாத்தி அதனை  தொடர்ந்து  கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K