சி.பி.ஐ.யில் இந்த வாரம் புகார் செய்வேன். மிரட்டல், உருட்டலுக்கு பயப்பட மாட்டேன் பாதை யாத்திரைக்கு 31 ஆயிரம் பேர் விருப்பம் அண்ணாமலை பேட்டி.
டெல்லியில் 3 தினங்களுக்கு முன் அமீத்ஷாவை சந்தித்த போது கர்நாடக தேர்தல் குறித்து பேசும் போது புதிய கல்வி கொள்கை சாராம்சம் மானில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரவது தான். உள்துறை அமைச்சகத்தில் எந்த ஒரு தகவல் சொன்னாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். திமுக எந்த விசயமாக இருந்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டமாக பார்க்கின்றனர். மத்திய அரசு பிராந்திய மொழிகளின் பக்கம் இருப்பதை தான் அமீத்ஷாவின் செயல்பாடு முலம் காட்டுகிறது.
10 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்த போது எத்தனை தேர்வுகள் இந்தியில் மட்டும் இருந்தது. பல தேர்வுகள் பிராந்திய மொழிகளுக்கு மாற்றப்பட்டு உள்ளது.டெல்லியில் சி.பி.ஐ. அனுமதி கிடைத்ததும் இந்த வார இறுதிக்குள் புகார் மனு தரப்படும்.
ஊழல் செய்த பணத்தை வக்கீல்களுக்கு தர திமுக நினைத்தால் நிச்சயம் வழக்கு தொடரப்படும். ஒரு பக்கம் நீதிமன்றமும் மறு பக்கம் மக்கள் மன்றமும் இருப்பதால் பயப்பட தேவையில்லை. இந்தனை ஆண்டுகள் கொள்கையடித்த பணத்தை செலவு செய்து தான் ஆகவேண்டும்.
நான் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக வைக்கப்பட்டது. இதில் ஒரு குற்றசாட்டை மறுத்து பேசட்டுமே. 24 மணி நேரத்தில் பாதை யாத்திரை இளையதள உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் கட்சி சாராதவர்கள் பங்கேற்க 31 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக பதிவு செய்து உள்ளனர்.
இன்னும் 3 நாளில் ஒரு லட்சமாக மாறும். சாதாரண ஒரு மனிதன் ஊழலை எதிர்த்து நடத்த பாதை யாத்திரைக்கு மக்கள் வர தயாராக உள்ளனர். ஆனால் 24 மணி நேரத்தில் ஒரு குற்றச்சாட்டையும் மறுக்கவில்லை. போராட்டம் தொடங்கி முடிக்க போவதில்லை.
இன்னும் பல விசயங்களை வெளியீட போகிறேன். இதற்கு எல்லாம் பயப்படுகிற ஆள் நான் கிடையாது. ஆர்.எஸ்.பாரதி கோர்ட்டிற்கு சுற்றுலா செல்வார் என்று கூறுகிறார். சுற்றுலா சென்றாலும் கட்சி வளர்க்க நேரம் இருக்கிறது. நீங்கள் கோர்ட்டிற்கு வாருங்கள்.
கோர்ட்டில் இன்னும் அதிகமான ஆதாரங்களை தரப்படும். இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் என்னிடம் வைத்து கொள்ள கூடாது. ஒன்னும் தெரியாதவர்களிடம மிரட்டி உருட்டி பார்த்துக் கொள்ளலாம். மிரட்டுலும் உருட்டலும் ஒன்னுக்கு ஆகாது. ஆர்.எஸ்.பாரதி இல்லை அவரது தந்தையே வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
இந்தியாவிலேயே குற்றச்சாட்டுகளை கூறியும் மறுக்க முடியாமல் 15 நாளில் ஆதாரம் கொண்டு வா என்பது புதிதாக இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியதான் போகிறது. அச்சறுத்தலுக்கு எல்லாம் பயம் கிடையாது.