ஒரு வருட வாடகை கட்டவில்லை நோட்டீஸ் பெரும் நிலையில் உள்ளேன் – திரு. கே.எஸ். அழகிரி ட்வீட்!!

0
128
#image_title

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களின் டிவிட்டர் மற்றும் முகநூல் செய்தி.

50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக, ஒருமுறை மக்களவை உறுப்பினராக இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூபாய் 16,000 வாடகைக்கு குடியிருக்கிறேன். ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என்று நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன்.

நான்கு ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது ? மூன்று லட்ச ரூபாய் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது ? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள் ? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.