ஐயா தமிழ் இயக்குனர்களே! போதும் சாமி – தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி கதறல்!

0
160

ஐயா தமிழ் இயக்குனர்களே! போதும் சாமி – தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி கதறல்!

தர்பார் படம் பார்த்த ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவர் படத்தில் உள்ள லாஜிக் குறைகளை பார்த்து அதிருப்தியடைந்து தமிழ் இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு நடித்துள்ள படம் தர்பார். நேற்று வெளியானது.  இந்த படம் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பை பெற்றாலும் நல்ல வசூல் செய்வதாக சொல்லப்படுகிறது.  

ஆனால் விமர்சகர்கள் மத்தியில் கௌம் கண்டனங்களைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம் என்கவுண்ட்டர் என்ற விஷயத்தை ஆதரிப்பது, மனித உரிமை அதிகாரிகளை பயந்தாங்கொல்லிகள் போல காட்சிப் படுத்தியது என அடுக்கிக் கொண்டே போகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை கடுப்பான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் தனது ட்விட்டரில் ” ஐயா, டேய் தமிழ் இயக்குனர் களா … இனிமே இந்த IAS ,IPS பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா .. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது ..” என்று கூறியுள்ளார்.

அவர் தர்பார் படத்தை நேரடியாகக் குறிப்பிடாவிட்டாலும் நேற்று தர்பார் ரிலிஸாகியுள்ளதாலும், படத்தின் கதை ஐ ஏ எஸ் அதிகாரி ஒருவரின் கதை என்பதாலும் தர்பாரைதான் சொல்லுகிறார் என்பது வெட்ட வெளிச்சம்.

இது ஒருபுறமிருக்க ரஜினியை இளமையாக காமிக்கிறேன் பேர்வழி என்று மோசமாக கிராபிக்ஸ் செய்யப்பட்ட காட்சிகளைக் காட்டி முருகதாஸ் கிச்சு கிச்சு மூட்டுவதாக நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்துள்ளனர். மொத்தத்தில் தர்பார் ரஜினி ரசிகர்களை மட்டும் திருப்திப்படுத்தும் படமாக அமையும் என தெரிகிறது.

Previous articleஇந்த கிரிக்கெட்டில் தோனியின் காலம் முடிந்துவிட்டது –ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ரவி சாஸ்திரியின் பேட்டி !
Next articleதர்பார் வசூல் மந்தம் – முன்கூட்டியே ரிலிஸாகும் தனுஷின் பட்டாஸ் !