சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் t20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒரு நாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசை பட்டியலில் 122 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 116 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 112 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 106 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், நியூசிலாந்து அணி 101 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், இங்கிலாந்து அணி 95 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் உள்ளன.

டி20 தரவரிசை பட்டியல் பொருத்தவரை இந்திய அணி 264 புள்ளிகள் உடன் முதலிடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 257 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணி 252 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 250 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், நியூசிலாந்து அணி 250 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது

டெஸ்ட் தரவரிசையை பொருத்தவரை 124 புள்ளிகள் உடன் உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியா அணி முதலிடம் பிடித்துள்ளது. 120 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்திலும், 105 புள்ளிகள் உடன் இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திலும். 103 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா இடத்திலும், ஐந்தாவது இடத்தில் நியூசிலாந்து 96 புள்ளிகள் உடனும், ஆறாவது இடத்தில் பாகிஸ்தான் 89 புள்ளிகளுடன் உள்ளது.