அலுவலகத்தில் அடுத்தடுத்து ஐடி ரெய்டு!! பல  கோடி ரூபாய் கணக்கு காட்டப்படவில்லை!!

0
125
ID raid in the office of the registrar!! Crores of rupees unaccounted!!
ID raid in the office of the registrar!! Crores of rupees unaccounted!!

அலுவலகத்தில் அடுத்தடுத்து ஐடி ரெய்டு!! பல  கோடி ரூபாய் கணக்கு காட்டப்படவில்லை!!

தமிழகத்தில் முதலில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பான் கார்டு இல்லாமல் பத்திர பதிவு செய்வதாக புகார் வந்ததை அடுத்து இதனை தொடர்ந்து பல்வேறு புகார் வந்து கொண்டே இருந்தது.

மேலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடு நடப்பதாக புகார் வந்த நிலையில் இதில் அதிக அளவு பணம் கணக்கு காட்டாமல் அலுவலகம் மறைப்பதாக தகவல் வெளியானது.

சந்தேகத்தின் பெயரில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் உண்மையில் முறைகேடு நடப்பதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று தமிழகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளால் சார்பதிவாளர் அலுவலகத்தில்  சோதனை நடத்தப்பட்டது.

இது சென்னை மற்றும் திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக இந்த சோதனை நடத்தப்பட்டது.அவ்வாறு சோதனை மேற்கொண்டதில் மொத்தம் ரூ.3,௦௦000 கோடி ரூபாய் மதிப்பிற்கு கணக்கு காட்டாமல் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த சோதனை நடத்த வருமான வரி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த சோதனையில் மட்டும் 2,000 கோடி ரூபாய்கள் கணக்கு காட்டாமல் அலுவலகத்தில் பதுக்கி  வைத்திருந்த பணம் வருமான வரித்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டதில் கணக்கில் காட்டப்படாமல் இருத்த பல கோடி ரூபாய்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனை தொடர்ந்து 17 மணி நேரம் நடத்தப்பட்டது.இதில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

இதில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேலாக பத்திர பதிவு நடத்தப்பட்டது.பான் கார்டு இல்லாமல் பத்திர பதிவு செய்தவர்கள்  வருமான வரித்துறை 60 ஐ சமர்பிக்க வேண்டும். ஒருவேளை படிவம் இணைக்காமல் இருந்தால் வருமான வரி கணக்கிற்கு செல்லாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous articleபெட்ரோல் விலையை விட அதிகரிக்கும் தக்காளி விலை! அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்!!
Next articleஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் வைத்த கோரிக்கை!!