விவசாயிகளுக்கான அடையாள அட்டை!! மார்ச் 31 தான் கடைசி தேதி!!

விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு கடன், சந்தை படுத்துதல் கொள்முதல் போன்றவற்றிற்கென பல நலத்திட்டங்களை மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழங்கி வருகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் விவசாயி கால தங்களுடைய நிலங்களின் உடமை விவரங்கள் மற்றும் தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் என அனைத்தையும் வழங்க வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இதனை செய்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால் விரைவாக விவசாயிகள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக மத்திய அரசு தரப்பில் முக்கியமான முடிவு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அந்த முடிவின்படி, இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளினுடைய உடமை நிலவிவரங்கள் சுய விவரங்கள் என அனைத்தையும் இணைத்து ஆதார் அடையாள அட்டை போன்று விவசாயிகளுக்கான பிரத்தியேக அடையாள அட்டை ஒன்று விநியோகிக்கப்படும் என்றும் காலதாமதம் செய்யாமல் விவசாயிகள் அனைவரும் தங்களுடைய கிராமங்களில் நடக்கக்கூடிய சிறப்பு முகாம்களை கலந்து கொண்டு தங்களுடைய நிலங்களின் விவரங்கள் சுய விவரங்கள் என அனைத்தையும் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை தங்களுடைய கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவில்லை என்றால் உடனடியாக இ சேவை மையங்களுக்கு சென்று எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாகவே தங்களுடைய நிலத்தின் விவரங்கள் சுயவிவரங்களான ஆதார் எண் பான் கார்டு என் போன்ற முக்கிய சுய விவரங்களை இணைத்து விவசாயிகளின் பிரத்தியக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் எளிமையாக மத்திய மற்றும் மாநில அரசினுடைய அனைத்து திட்டங்களிலும் பயன்பட முடியும் என்றும் இதற்கு காலதாமதம் எடுத்துக் கொள்ளாது என்றும் ஒவ்வொரு முறையும் விவசாயிகளினுடைய அலைச்சலை குறைப்பதற்காகவே இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது