ஐயப்பன் கோவிலுக்கு வர கடும் கட்டுபாடுகள் விதித்த இடுக்கி மாவட்ட கலெக்டர்!!

0
67
Idukki District Collector imposed strict restrictions to visit Ayyappan temple!!
Idukki District Collector imposed strict restrictions to visit Ayyappan temple!!

திருவனந்தபுரம் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த பூஜையில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றன. மேலும் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 5  மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றன ஐயப்ப பக்தர்கள். இதனை அடுத்து நேற்று கொட்டும் மழையிலும் 80,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். சபரிமலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று இரவு வரை பெய்தது.

நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்தபோதிலும் பக்தர்கள் அதை பொருட்படுத்தாமல் பம்பையிலிருந்து மலையேறி வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று இரவு நடை சாத்தும் வரை 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று மாலை 6 மணிக்குள் 71,922 பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பினர். அதிகபட்சமாக தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் நேற்று பலத்த மழையிலும் அதைவிட அதிகமாக பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வனப்பகுதி வழியாக செல்ல தடை சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் குமுளியில் இருந்து முக்குழி, சத்ரம் வழியாக நடந்து செல்வது உண்டு. இது வனப்பகுதி ஆகும். மண்டல, மகரவிளக்கு காலங்களில் மட்டுமே இந்த வனப்பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதுவும் பகலில் மட்டுமே இந்த வழியாக செல்ல அனுமதி உண்டு. இந்தநிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் இந்த வனப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல தடை விதித்து இடுக்கி மாவட்ட கலெக்டர் விக்னேஷ்வரி உத்தரவிட்டுள்ளார். அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு நீடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleஅரசியலில் விஜய் நிச்சயமாக நல்லது செய்வார் என நம்புகிறோம்!! சினேகா மற்றும் பிரசன்னா!!
Next articleபி.வி சிந்துக்கு கல்யாணம்!! மாப்பிளை யார் தெரியுமா?