பெண்களே இதை சாப்பிட்டால் இனி இடுப்பு வலிக்கு குட் பை

Photo of author

By Divya

பெண்களே இதை சாப்பிட்டால் இனி இடுப்பு வலிக்கு குட் பை

இன்றைய அவசர உலகத்தில் இடுப்பு வலி பாதிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக் கூடிய சாதாரண நோயாக மாறிவிட்டது.ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட வேலைபார்ப்பது,குனிந்து நிமிர்ந்தபடி வேலை பார்ப்பது போன்ற காரணங்களால் இடுப்பு வலி ஏற்படுகிறது.

இடுப்பு வலியால் பெண்கள் பலர் அவதியடைந்து வருகின்றனர்.இதை சரி செய்ய தாங்கள் கட்டாயம் கீழ்கண்ட வைத்தியத்தை செய்து வர வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உளுந்து – 50 கிராம்
2)நெய் – ஒரு தேக்கரண்டி
3)தேன் – 5 தேக்கரண்டி
4)சுக்கு பொடி – 1/4 தேக்கரண்டி
5)உப்பு – சிட்டிகை அளவு

செய்முறை:-

முதலில் 50 கிராம் அளவு கருப்பு உளுந்து அதாவது தோல் நீக்கப்படாத உளுந்தை ஒரு வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்

உளுந்து கருகிட கூடாது.அதனால கவனமாக வறுத்துக் கொள்ளவும்.பின்னர் இதை ஆறவிட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்து பொடி,சுக்கு பொடி மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு அடுப்பில் ஒரு இரும்பு சட்டி வைத்து கரைத்த உளுந்து மாவை ஊற்றி மிதமான தீயில் கிண்டி விடவும்.தண்ணீர் வற்றி வரும் வரை சுண்டவிடவும்.

பிறகு அதில் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை தொடர்ந்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கிண்டி விடவும்.ஹல்வா பதத்திற்கு உளுந்தை கிண்டி விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து உளுந்து பேஸ்டை ஆறவிட்டு சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கும்.இந்த உளுந்து பேஸ்டை ஒருமுறை செய்தால் 2 அல்லது 3 நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.

உளுந்து பருப்பு எலும்பு தொடர்பான அனைத்து பிரச்சனைக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது.இடுப்பு எலும்பில் வலி உண்டானால் இந்த உளுந்து பேஸ்ட் தயாரித்து சாப்பிடலாம்.