20 டு 25 வயது இளைஞர்கள் டாட்டோ போட்டால் கண்டிப்பாக எச்ஐவி தான்! ஆய்வில் வந்த திடுக்கிடும் உண்மை!
இந்த காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் பெருமளவு பேஷனாக வலம் வருவது டாட்டோ போட்டுக் கொள்வது தான். இந்த டேட்டோ ஒருவித ஊசியின் மூலம் போடப்படுகிறது. ஒருத்தருக்கு ஒரு ஊசி என்ற கட்டுப்பாட்டை பயன்படுத்தி தான் போட வேண்டும். ஆனால் பல இடங்களில் ஒருவருக்கு பயன்படுத்திய அதே ஊசியை மற்றொருவருக்கு போட்டு விடுகின்றனர். அவ்வாறு போடப்படுபவர்கள் யாருக்காவது எச்ஐவி இருந்தால் அடுத்த படியாக போடும் நபருக்கும் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
அவ்வாறு தான் உத்திரபிரதேசம் மாநிலத்தின் இருவருக்கு ஹச்ஐவி பாதித்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஒரே சமயத்தில் இரு இளைஞர்களுக்கு உடல் உபாதைகள் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இருவரும் 20 முதல் 25 வயது உடைய நபர்கள் தான். இந்த சிறு வயதிலேயே இவ்வளவு உடல் உபாதைகளா என்று மருத்துவரை சந்தித்தபோதுதான் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது.
முதலில் அனைவருக்கும் வழங்கப்படும் சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் அளித்துள்ளனர். சிகிச்சை முறை இவர்களுக்கு பயனளிக்காததால் மேற்கொண்டு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யப்பட்டதில் தான் இருவருக்கும் எச்ஐவி இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களை விசாரித்த போது சமீபத்தில் அவர்கள் யாருடனும் உடலுறவு கொள்ள வில்லை என்பது அடுத்தபடியான அதிர்ச்சிகரமான தகவலாக இருந்தது.
இவ்வாறு இருக்கும் பொழுது எப்படி தொற்று பரவி இருக்க முடியும் என்று கேள்வி எழுந்தது. அப்பொழுதுதான் இவர்கள் இருவரும் சமீபத்தில் பச்சை குத்தியது தெரியவந்தது. எச்ஐவி பாதிக்கப்பட்டவர் மீது பயன்படுத்திய ஊசியை கிருமி நாசினி கொண்டு கூட சுத்தம் செய்யாமல் இவருவருக்கும் பயன்படுத்தியதால் தொற்று பரவியது கண்டறியப்பட்டது.