”டி 20 உலகக்கோப்பை தொடரில் இவர் கண்டிப்பா இருக்கணும்….” ரவி சாஸ்திரி பரிந்துரைக்கும் இளம் வீரர்!

”டி 20 உலகக்கோப்பை தொடரில் இவர் கண்டிப்பா இருக்கணும்….” ரவி சாஸ்திரி பரிந்துரைக்கும் இளம் வீரர்!

இந்திய அணியை டி 20 உலகக்கோப்பைக்காக தேர்வு செய்யும் பணிகள் இப்போதே தேர்வுக்குழு முன்பாக உள்ளன.

டி 20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதுதான் தற்போது பிசிசிஐக்கு இருக்கும் சிக்கலான வேலையாக அமைந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் தற்போது உள்ளனர். அவர்களில் 15 பேரைத் தேர்வு செய்வது மிகப்பெரிய குழப்பமான பணியாகும்.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஷமி இந்தியாவுக்காக டி 20 போட்டிகளில் இடம்பெறவில்லை. ஆனால், அவர் இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் வழக்கமான இடம்பெற்று வருகிறார். அதனால் அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் இடம்பெற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுபற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ”டி 20 உலகக்கோப்பை தொடரில் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். அணியில் அர்ஷ்தீப் இருக்கவேண்டும். அவர் உலகக்கோப்பை தொடரில் ஹீரோவாக ஜொலிப்பார்” எனக் கூறியுள்ளார். கடந்த சில போட்டிகளாக அர்ஷ்தீப் சிங் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக வெற்றிகளைப் பெற்று தந்து வருகிறார். குறிப்பாக இறுதி ஓவர்களில் அவரின் பந்து வீச்சு சிறப்பாகவும், ரன்களைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.