பிறந்த குழந்தை சிரித்தால் தாய்க்கு முடி கொட்டுமா..?

Photo of author

By Parthipan K

பிறந்த குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தால் தாயின் முடி கொட்டும் என்பது பண்டைக் காலத்தில் நம்பிக்கை. இன்றும் பல இடங்களில் இதை கூறி வருகின்றனர்.

பெண்ணின் அழகுக்கு கூந்தல் மிக அவசியமாக இருக்கும் போது முடி கொட்டுவதை யார் தான் விரும்புவார்கள்.

குழந்தைகள் இறைவனின் வரம் என்றும் அதனால் அவர்களுக்கு திவ்ய சக்தி உண்டு என்பது நம்பிக்கை. அதனால், குழந்தை தாயின் முகம் பார்த்து சிரிக்கும் போது தாயின் முடி கொட்டும் என்றும் நம்பியிருந்தனர். வேறு யாருடைய முகம் பார்த்து குழந்தை சிரித்தால் அவர்களுக்கு முடி கொட்டுவதில்லை என்றும் நம்பியிருந்தனர்.

குழந்தை தாயின் முகம் பார்த்து சிரிக்க ஆரம்பிக்கும் போது தாய்க்கு முடி கொட்டத் தொடங்கும் என்பது வெறும் நம்பிக்கை அல்ல நிஜம்.

கர்ப்ப காலத்தில் அதிக அளவிலான ஹார்மோன் செயல்பாட்டினால் கர்ப்பிணியின் பல உடல் பாகங்களைப் போலவே தலைமுடியிலும் வளர்ச்சியை காணலாம். மகப்பேறுக்குப் பின்னும் சில காலத்திற்கு இந்த வளர்ச்சி தொடரும்.

குழந்தை பிறந்து சுமார் மூன்று மாதங்கள் ஆன பிறகு ஹார்மோன் செயல்பாடுகள் பழைய நிலைக்கு மாறும். இதை தொடர்ந்து அதிகமாக வளர்ந்த தலைமுடி கொட்ட தொடங்குகின்றது. பிறந்த குழந்தை சிரிக்க தொடங்குவதும் மூன்று மாதங்கள் முடிந்ததும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தான் பிறந்த குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தால் தாயின் முடி கொட்டும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.