வெற்றிலையை இப்படி பயன்படுத்தினால்.. இருதய படபடப்பு பிரச்சனைக்கு குட் பாய் தான்!!
உங்களில் பலர் இருதய படபடப்பு பாதிப்பால் அவதியடைந்து வருவீர்கள்.இதயம் வேகமாக துடிப்பதை தான் இருதய படபடப்பு என்கிறோம்.இந்த பாதிப்பு குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)உலர் திராட்சை
2)கொத்தமல்லி தழை
3)தண்ணீர்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் ஐந்து உலர் திராட்சை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
அதன் பின்னர் சிறிதளவு கொத்தமல்லி தழையை அதில் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் இருதய படபடப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)வெண்தாமரை
2)தண்ணீர்
3)வல்லாரை இலை
செய்முறை:-
ஒரு வெண்தாமரையை எடுத்து அதன் இதழ்களை தனியாக பிரித்துக் கொள்ளவும்.பிறகு அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் நறுக்கிய வெண்தாமரை இதழ்களை போட்டு கொதிக்க 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.பின்னர் ஒரு கைப்பிடி அளவு வல்லாரை கீரை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்.இதை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த சாற்றை வெண்தாமரை சாற்றில் கலந்து அருந்தி வந்தால் இருதய படபடப்பு முழுமையாக குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)வெற்றிலை
2)கிராம்பு
3)சின்ன வெங்காயம்
4)தேன்
செய்முறை:-
முதலில் நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு உரலில் போட்டுக் கொள்ளவும்.இதனுடன் ஒரு வெற்றிலையை கிள்ளி போட்டு கொள்ளவும்.
அதன் பின்னர் இரண்டு கிராம்பு சேர்த்து நன்கு இடித்துக் கொள்ளவும்.இந்த விழுதை ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டி சாறு பிழிந்து கொள்ளவும்.இந்த சாற்றில் சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருதய படபடப்பு குணமாகும்.