குழந்தைகளை கல்வி கற்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்பினால் கழிவறை கழுவ சொன்னார்களாம்?..கொந்தளித்த பெற்றோர்கள்? தமிழக அரசின் பதில் என்ன!..

0
226
If children are sent to schools for education, they are asked to wash toilets?..Parents are upset? What is the response of Tamil Nadu government!..
If children are sent to schools for education, they are asked to wash toilets?..Parents are upset? What is the response of Tamil Nadu government!..

குழந்தைகளை கல்வி கற்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்பினால் கழிவறை கழுவ சொன்னார்களாம்?..கொந்தளித்த பெற்றோர்கள்? தமிழக அரசின் பதில் என்ன!..

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்குதான் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் ஆசிரியர் ஒருவரும் தலைமை ஆசிரியர் ஒருவரும் என இரண்டு பேர் தான் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியர் மீது ஏற்கனவே பல புகார் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

இந்நிலையில் அந்த ஆசிரியரின் ஒருவர் பள்ளி கழிப்பறையை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது வெளியில் சென்று தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கழிவறையை பூட்டி வைத்துள்ளனர்.

இதனால் மாணவர்கள் சிறுநீர் கழிக்க சாலையில் கடந்து செல்கின்றனர். மேலும் தனது காரையும் சுத்தப்படுத்தவும் மற்றும் வராண்டாக்கலை சுத்தமாக கூட்டுமாறும்  மாணவர்களைவேலை வாங்கியதாகவும் பெற்றோர்கள் கூறினார்.

இதனை தொடர்ந்து நேற்று பள்ளி வளாகத்தில் உள்ள செடிகள் மற்றும் பூண்டுகளை அகற்றுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்கினர். மாணவர்களோ செய்வதன்று அறியாமல் அங்குள்ள முள் புதர்கள் மற்றும் செடிகள் ஆகியவற்றை சுத்தப்படுத்தி இருந்தனர்.

இதனால் சில மாணவர்களுக்கு பூச்சி கடி அலர்ஜி போன்று உடம்பில் பல தேமல்கள் ஏற்பட்டதால் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளியின் முன்பு திரண்டனர். மேலும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும் என்று அவர்கள் உறுதியாக இருந்தனர்.

இதனையடுத்து தமிழக அரசால் வழங்கப்படும் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடை போன்றவற்றை மாணவர்கள் பெறுவதற்காக மாணவர்களிடம் ஐந்து முதல் நூறு வரை வசூல் செய்ததாக தலைமை ஆசிரியர்களின் மீது பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.எனவே இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்து வந்தது.

Previous articleதனியார் உணவு டெலிவரி ஊழியிருக்கும் மர்ம  கும்பலுக்கும் இடையே நடந்தது என்ன? போலீசார் தீவிர விசாரணை! 
Next articleஆசியக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி… பாக். கேப்டன் பாபர் ஆசாமின் கூல் பதில்!