சாமானியர்கள் குற்றம் புரிந்தால் போலீஸ் வரும்!! போலீஸே குற்றம் புரிந்தால்!!

Photo of author

By Gayathri

சாமானியர்கள் குற்றம் புரிந்தால் போலீஸ் வரும்!! போலீஸே குற்றம் புரிந்தால்!!

Gayathri

If common people commit crimes, police will come!! If the police are guilty!!

தமிழகத்தில் போலீஸ் பணியை உயிர் கடமையாக பார்ப்பவர்கள் மத்தியில் சமீப காலமாக வெவ்வேறு பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகளுக்கு போலீஸார் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ துணை போய் வருகின்றனர். போலீசாரை எதிர்த்து குற்றங்களை வெளிக்கொண்டு வருவது அசாத்தியமாக உள்ளது. சமீபமாக பல போலீசார் குற்றங்களில் சிக்கிக் கொண்டிருப்பது வெளி வருகின்றன. சமீபத்தில் போலீசாருக்கு எதிராக வெளிவந்த சில தகவல்கள் பின்வருமாறு,

வருமான வரி அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்ட எஸ். ஐ.ராஜா சிங் மற்றும் எஸ். ஐ. சன்னி லாய்டு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொடூரமாக சிறுமி பாலியல் வன்முறையில் ஈடுபட்டவருக்கு துணையாக சிறுமியின் பெற்றோர்களை தாக்கிய வழக்கில் மகளிர் காவல் இன்ஸ்பெக்டர் ராஜி கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் மொபைல் மூலம் அடையாறு காவல் நிலைய போலீசார்களுடன் பேசியது தெரியவந்துள்ளது. கடத்தல் கும்பல் உடன் இணைந்து போலீஸே போதைப் பொருள் விற்பனை செய்துள்ளது. மேலும் இவ்வழக்கில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய ஊழியர்களும் மறைமுகமாக உதவி செய்து வருவது தெரிய வந்துள்ளது.

மதுரை போலீசார் குடும்ப பிரச்சினை காரணமாக நகை கொள்ளை போன்ற பல திடுக்கிடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவை அனைத்தும் வெளிவந்த தகவல்கள் மட்டுமே. வெளிவராத குற்றங்களின் பின்னணிகள் எத்தனையோ? வெளிவந்த இந்த குற்றங்கள் புரிந்த போலீசாருக்கு எந்தவித தண்டனையும் வழங்காதது ஏன்? மேலும் காவல்துறையினரை பயன்படுத்தி குற்றம் புரிவதற்கு அதிக தண்டனை வழங்க வேண்டும். மேலும் குற்றம் புரியும் போலீசாரை காவல்துறையை விட்டு நீக்க வேண்டும். இது போன்ற குற்றங்களை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்றெல்லாம் பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.