இவ்வாறு செய்தால் இஞ்சி பூண்டு விழுது 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!!

0
23
#image_title

இவ்வாறு செய்தால் இஞ்சி பூண்டு விழுது 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்கள்!!

இந்திய உணவுகளில் இஞ்சி பூண்டு பயன்பாடு அதிகம் இருக்கிறது.இதன் வாசனை உணவில் சுவையை கூட்டுகிறது.அசைவ உணவு சுவையாக இருக்க இஞ்சி பூண்டு விழுது முக்கிய காரணமாகும்.இந்த இஞ்சி பூண்டு விழுது தயார் செய்ய அதன் தோலை நீக்கி சுத்தம் செய்து அரைத்து பயன்படுத்த வேண்டும்.இதற்கு சலித்து கொண்டு பலர் ககடைகளில் கிடைக்க கூடிய இஞ்சி பூண்டு விழுதை வாங்கி உபயோகிக்கிறார்கள்.ஆனால் பாக்கட்டில் உள்ள இஞ்சி பூண்டு விழுது உணவில் எந்த ஒரு சுவையையும் கூடுவதில்லை.எனவே வீட்டு முறையில் இஞ்சி பூண்டு விழுதை ஒரு முறை அரைத்து கிட்டத்தட்ட 6 மாதங்கள் வரை பயன்படுத்தும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.அதை பின்பற்றி பயனடையுங்கள்.

இஞ்சி பூண்டு பேஸ்ட் தயார் செய்யும் முறை:-

முதலில் 1 கப் அளவிற்கு பூண்டு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.அடுத்து 3/4 கப் அளவு இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து ஒரு ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரை எடுத்து அதில் உரித்து வைத்துள்ள பூண்டு மற்றும் நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகளை சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் பொழுது ஒரு துளி தண்ணீர் கூட சேர்க்கக் கூடாது.

அடுத்து சுத்தமான ஈரம் இல்லாத கண்ணாடி ஜார் ஒன்றினை எடுத்து கொள்ளவும்.பிறகு தயார் செய்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை கண்ணாடி ஜாரில் சேர்த்து மூடவும்.

பின்னர் இதை பிரிட்ஜின் ஃப்ரீசரில் வைத்து விடவும்.தங்களுக்கு எப்பொழுது இஞ்சி பூண்டு விழுது தேவை இருக்கிறதோ அந்த சமயத்தில் ஃப்ரீசரில் இருந்து எடுத்து வெளியில் 10 நிமிடம் கழித்து பயன்படுத்தவும்.

குறிப்பாக இஞ்சி பூண்டு விழுதில் சிறு துளி தண்ணீர் கூட படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.இவ்வாறு செய்து பயன்படுத்தினால் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.