அனைவருக்கும் சம நீதி – சமூக நீதி கிடைக்க வேண்டுமெனில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!! பாமக நிறுவனர் அரசிடம் வலியுறுத்தல்!!
தமிழ்நாடு அரசின் அனைத்து பணிகளுக்கும் உள்ள நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் அரசு பணியில் சேர வேண்டும் எனில் எழுத்து தேர்வு, மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டும் நடைபெற்று அதன் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த நேர்முகத் தேர்வு தகுதியும், திறமையும், கொண்ட பலரின் வாய்ப்பை பறித்து விடுவதாக பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் அவர்கள் கூறியுள்ளார். அவர் கூறுகையில் தமிழக அரசின் அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்து இருப்பதாவது,
தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசு பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் போது நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, திறமையும் தகுதியும் கொண்ட பலரின் வாய்ப்புகளை தட்டி பறித்து விடுகிறது. அனைவருக்கும் சம நீதியும், சமூக நீதியும் கிடைப்பதற்கு நேர்முகத்தேர்வு ஒரு பெரும் தடையாக உள்ளது அந்த தடை விரைவில் நீக்கப்பட வேண்டும்.
அருகில் உள்ள மாநிலமான ஆந்திர மாநிலத்தில் அனைத்து பணிகளுக்கும் 2019 ஆம் ஆண்டு முதல் நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் முறைகேடுகள் நடைபெறுவதால் இங்கும் அதேபோல் நேர்காணலை ரத்து செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசில் அனைத்து நிலை பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!!
தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் போது, அதற்காக நடத்தப்படும் நேர்முகத்தேர்வு தகுதியும்,…
— Dr S RAMADOSS (@drramadoss) September 14, 2023