ஒவ்வொரு பெண்ணும் பருவமடைந்த பிறகு மாதவிடாய் சுழற்சியை சந்திக்கின்றனர்.இது 28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை இந்த மாதவிடாய் சுழற்சி வருகிறது.இந்த நாட்களில் சில பெண்கள் வயிறு வலி,வயிறு பிடிப்பு,அதிக உதிரப்போக்கு,உடல் சோர்வு போன்ற பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
மாதவிடாய் காலத்தில் உடல் மற்றும் மனதளவில் பெண்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் பொதுவான பாதிப்பு வயிற்று வலி தான்.இந்த வயிற்று வலியை தாங்கிக்க கொள்ள முடியாத பெண்கள் வலி நிவாரணி மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர்.
ஒவ்வொரு முறை வயிற்று வலி வரும் பொழுதும் இந்த வலி நிவாரணி மாத்திரை எடுத்துக் கொண்டால் நாளடைவில் அதற்கு அடிமையாகிவிட வாய்ப்புகள் அதிகம்.ஆகவே மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் அனைத்துவித பாதிப்புகளும் குணமாக குணமாக இயற்கை வைத்தியத்தை பின்பற்றலாம்.
அந்தவகையில் மாதவிடாய் காலத்தில் நெய் கலந்த தண்ணீர் பருகி வந்தால் வயிறு வீக்கம் மற்றும் வயிறு வலி ஏற்படாமல் இருக்கும்.தண்ணீரில் நெய் கலந்து குடிப்பதால் உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நெய் கலந்த தண்ணீர் வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகளை தளர்வடைய செய்கிறது.இதன் காரணமாக வயிறு இறுக்கம்,வயிற்று வலி உண்டாவது குறையும்.
சில பெண்களுக்கு மாதவிடாயின் போது இரத்த கட்டிகள் வெளியேறும்.நெய் கலந்த தண்ணீர் குடித்து வந்தால் இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீண்டுவிடலாம்.நெய்யில் இருக்கின்ற நல்ல கொழுப்பு உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.மாதவிடாய் காலத்தில் அதிக சோர்வை உணரும் பெண்கள் நெய் சேர்க்கப்பட்ட தண்ணீர் பருகலாம்.
நெய் தண்ணீர் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:-
1)தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)நெய் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
**முதலில் பாத்திரம் ஒன்றை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.
**பிறகு இந்த சூடான நீரை கிளாஸில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி பசு நெய் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து பருக வேண்டும்.நெய் சேர்த்த தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.