இரண்டாவது டி20 போட்டியை வெல்லுமா இந்தியா? இலங்கை – இந்தியா இன்று மோதல்..!

Photo of author

By Janani

இரண்டாவது டி20 போட்டியை வெல்லுமா இந்தியா? இலங்கை – இந்தியா இன்று மோதல்..!

Janani

இந்தியா – இலங்கை இடையிலான இரண்டாவது போட்டியை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி பயிற்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறது.

இந்திய இலங்கை அணிகளுக்கான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளுக்காக இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் இந்தியா இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இன்று புனேவில் இரண்டாவது டி20 போட்டிகள் நடைபெறுகிறது.இதற்கிடையில்,முதல் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் சஞ்சு சாம்சன் இரண்டாவது போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா விளையாடுவார் என அறிவித்துள்ளனர்.

இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்திய அணி இந்த போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் வென்றால் 1-1 என கணக்கை சமன் செய்யும் முனைப்பில் இலங்கை அணி பயிற்சி பெற்று வருவதால், இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.