பான் கார்டு ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் இரு மடங்கு பணம் பிடித்தம்!! வரி செலுத்தும் நபர்களுக்கு அலார்ட்!!
இந்திய குடிமகனின் அடையாளத்தை காட்டும் நோக்கில் ஆதார் கார்டு வடிவமைக்கப்பட்டது. தற்பொழுது வங்கி கணக்கு தொடங்குவது முதல் பண பரிவர்த்தனை என அனைத்திற்கும் ஆதார் கார்டு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. எந்த ஒரு சலுகையும் மக்கள் பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியமானதாக மாறிவிட்டது.
அந்த வகையில் பான் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்று அரசு கூறி வந்ததையடுத்து அதற்கான கால அவகாசமும் கொடுத்தது. மேற்கொண்டு கால அவகாசத்திற்குள் ஆதார் கார்டை இணைக்கா விட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தியது. இதனையடுத்து தற்பொழுது வருமான வரித்துறையும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதனை வரும் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் இல்லையென்றால் வருமான வரி தாக்குதல் செய்யும் பொழுது தேவையற்ற தடை ஏற்படும் என்று கூறியுள்ளனர். அதேபோல வரியை தாக்கல் செய்ய 31 ஆம் தேதி கடைசி நாள் என்பதால் அந்த தேதிக்குள் ஆதார் எண்ணை இணைத்து விட வேண்டும் இல்லையென்றால் இணைக்காத நபர்களுக்கு வரித்தொகையானது சற்று அதிகரிக்க கூடும் என்று கூறியுள்ளனர்.
வரித்தொகை விகிதத்தை உயர்த்துவதை தடுக்க வரி தாக்கல் செய்யும் நபர்கள் வரும் 31 ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து விட வேண்டும். ஓர் நாள் மட்டும் தற்பொழுது இருக்கும் பட்சத்தில் இதனை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.