நாய் கடித்தவர்கள் இதை செய்தால்.. ஆபத்துகளில் இருந்து மீண்டுவிடலாம்!!

0
4

தற்பொழுது தெருநாய்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.சாலைகளில் நாய்கள் அராஜகத்தால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் தெருவில் நடக்கவே அஞ்சுகின்றனர்.வெறி நாய்கள் மனிதர்களை கடிப்பது அதிகரித்து வருவதால் நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்களும் அச்சத்தில் இருக்கின்றனர்.

வெறி நாய்கள் கடித்தால் உடலில் ரேபீஸ் வைரஸ் தாக்கம் அதிகரித்துவிடும்.நாய் கடியை அலட்சியமாக கொண்டால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தாக அவை மாறிவிடும்.நாய்க்கடி விஷம் உடலில் நுழைந்தால் நிச்சயம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.நாய்கள் மட்டுமின்றி எலி,பூனை போன்றவை கடித்தாலும் அவை விஷமாக மாறி உயிரை பறித்துவிடும்.

உங்களை நாய் கடித்துவிட்டால் நீங்கள் சில விஷயங்களை பின்பற்றி பாதிப்பில் இருந்து உங்களை மீட்டுவிடலாம்.

நாய் கடித்துவிட்டால் உடனடியாக செய்ய வேண்டிய விஷயங்கள்:

1)பாதிக்கப்பட்ட இடத்தில் சோப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.பிறகு வெது வெதுப்பான நீரை கொண்டு நாய் கடித்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.

2)நாய் கடித்த இடத்தில் கிருமி நாசினி பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

3)நாய் கடிபட்ட இடத்தில் இரத்தப் போக்கு இருந்தால் காட்டன் துணி கொண்டு அவ்விடத்தை அழுத்தி இரத்த வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

4)பிறகு மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.நாய் கடிக்கு உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவர் சொல்லும் உண்வுமுறையை பின்பற்ற வேண்டும்.

5)நாய் கடிபட்டவர்கள் அடுத்து இரண்டு வாரங்களுக்கு தங்கள் உடல் நிலை மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும்.

Previous articleசேலம் மாநகராட்சியில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் மீது திமுக கவுன்சிலர் தாக்குதல்: பரபரப்பான மன்ற கூட்டம்
Next articleசாகும் வரை சர்க்கரை நோயே வராது.. இந்த ஒரு காயில் ஜூஸ் செய்து குடித்தால்!!