நாம் உண்ணும் உணவுகள் உணவுக் குழாய்க்கு சென்று செரித்து மற்ற உறுப்புகளுக்கு அனுப்பப்படுகிறது.இந்த உணவுக் குழாய் பாதையில் வரும் புண்களை அல்சர் பாதிப்பு என்கின்றோம்.அல்சர் புண்கள் ஏற்பட்டால் தொந்தரவுகள் பலவற்றை அனுபவிக்கக் கூடும்.
அல்சர் பிரச்சனையால் வரும் பாதிப்புகள்:
1)வயிற்று வலி
2)வயிறு எரிச்சல்
3)நெஞ்செரிச்சல்
4)குமட்டல்
5)எடை இழப்பு
6)நெஞ்சு பகுதியில் வலி
7)அவசரமாக மலம் கழித்தல்
8)வயிறு வீக்கம்
வயிற்றில் உருவாகும் இந்த அல்சர் புண்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளத் தவறினால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.இந்த அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் தங்கள் உணவுப்பழக்க வழக்கங்களில் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.
அல்சர் உள்ளவர்கள் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதேபோல் புளித்து போன உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும்.பதப்படுத்தி வைக்கப்படும் உணவுகளை தொட்டுக்கூடாத பார்த்திடாதீங்க.ஹோட்டல் உணவுகளை வாங்கி சாப்பிடாதீங்க.
உணவை தாமதமாக எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை நிறுத்திவிட்டு மாலை முதல் இரவு வரையிலான மூன்றுவேளை உணவுகளை உரிய நேரத்தில் சாப்பிட்டுவிடுங்கள்.வெறும் வயிற்றில் பூண்டு பானம்,எலுமிச்சை பானம்,வெங்காய பானம் பருகுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.எலுமிச்சையில் இருக்கின்ற சிட்ரிக் அல்சர் புண் எரிச்சலை அதிகமாக்கும்.பூண்டு,வெங்காயம் போன்ற காரத்தன்மை கொண்ட பொருட்கள் அல்சர் பாதிப்பை தீவிரமாக்கிவிடும்.
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் உணவு சமைக்க பயன்படுத்தும் எண்ணெயிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.பாமாயில்,கடலை எண்ணெய்,ரீபைன்ட் ஆயிலுக்கு பதில் நல்லெண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குளிர்ச்சி நிறைந்த நல்லெண்ணயை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிறு ஆரோக்கியம் மேம்படும்.அல்சர் புண்கள் குணமாக நல்லெண்ணெய் உணவுகளை சாப்பிடலாம்.நல்லெண்ணெய் நல்லது என்றாலும் அவற்றை குறைவான அளவே பயன்படுத்த வேண்டும்.
அதாவது சர்க்கரை இருப்பவர்களுக்கு அல்சர் பாதிப்பு இருந்தால் இருப்பது மில்லி அளவு நல்லெண்ணெய்யை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.உயர் இரத்த அழுத்தம்,கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் ஐந்து மில்லி அளவு நல்லெண்ணெய் நாளொன்றில் எடுத்துக் கொள்ளலாம்.