கர்ப்பிணி பெண்களே இதை மட்டும் தெரிந்து கொள்ளாவிட்டால் உங்கள் குழந்தை இறக்க கூட அதிக வாய்ப்புள்ளது!! எச்சரிக்கை!!
கர்ப்ப காலத்தில் பெரும்பாலானோருக்கு சர்க்கரை வியாதி தைராய்டு போன்ற பிரச்சனைகள் காணப்படும். குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பொழுது சிலருக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனை உடனடியாக கண்டறிந்து அதற்கு ஏற்ற உணவு பழக்கவழக்கம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களின் 9 மாதத்திற்குள் குறைந்தபட்சம் 3 அல்லது 4 முறை சர்க்கரை யாதிக்கான பரிசோதனையை செய்திருக்க வேண்டும்.
குறிப்பாக கர்ப்ப காலங்களில் பெண்களை குளுக்கோஸ் அறுந்து சர்க்கரை நோய் பரிசோதனையை எடுப்பார். இவ்வாறு இருப்பது மூலம் உங்கள் ரத்த சர்க்கரை அளவை கண்டறிய முடியும்.
அதில் 140 மில்லி கிராம் டி எல் என்று காட்டினால் கட்டாயம் சர்க்கரை வியாதி இருப்பது உறுதி.
இவ்வாறு இருப்பார்கள் மருத்துவரை அணுகி அதற்குரிய மருந்து மாத்திரை உள்ளிட்டவைகளை பின்பற்ற வேண்டும். அதேநேரம் உணவு பழக்கங்களிலும் கட்டுப்பாடு என்பது இருக்க வேண்டும்.
மேலும் உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் எளிமையாகவே வந்துவிடும். அதுமட்டுமின்றி மகப்பேறு சமயத்தில் ஒருவருக்கு தேவையான இன்சுலின் ஆனது சுரக்காத பட்சத்தில் சர்க்கரை அளவு உயரக்கூடும். இதனை கண்டுகொள்ளாவிட்டால் குழந்தை மற்றும் தாய் இருவருக்கும் பாதிப்பை உண்டாக்கும்.
மகப்பேறு நேரத்தில் சர்க்கரை நோய் குழந்தைகளை எப்படி பாதிக்கும்:
மகப்பேறு நேரத்தில் தாய்மார்களின் ரத்த சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டை மீறி இருந்தால் கட்டாயம் குழந்தை எடை கூடும். இதனால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்கும் நிலை உண்டாகலாம்.
அதுமட்டுமின்றி பிறந்த குழந்தையின் ரத்தத்தில் உள்ள அதனின் சர்க்கரை மற்றும் குறைய நேரிடும்.
மேலும் குழந்தைக்கு நுரையீரல் இதயத் துடிப்பு உள்ளிட்டவற்றிலும் பிரச்சனை உண்டாகும்.
இதனை ஒருமுறை கூட கண்டுகொள்ளா விட்டால் குழந்தை வயிற்றிலேயே இறக்கும் அபாயம் அதிகம்.
அதேபோல தாய்மார்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். ஏழு முதல் எட்டு மாதத்திலேயே குறை பிரசவம் மூலம் குழந்தைகள் வெளியேறுவது உண்டு.
அறுவை சிகிச்சை அல்லது சுயபிரசவம் எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு அதிக அளவு ரத்தப்போக்கு உண்டாகும்.
இந்த பாதிப்புகள் ஏதும் இல்லாத வண்ணம் முன்கூட்டியே அறிந்து அதனை கண்டறிந்து கொள்ளலாம்.
உணவு கட்டுப்பாடு:
காலை 7 மணி:
காலை நேரத்தில் ஒரு கிளாஸ் பால் அருந்தி கோதுமை சம்பந்தப்பட்ட பிஸ்கட் அல்லது ரஸ்க் சாப்பிடலாம்.
காலை 9 மணி:
இட்லி தோசை அல்லது சப்பாத்தி உள்ளிட்டவற்றில் சாப்பிடலாம்.
இதற்கு இணையாக கொத்தமல்லி தக்காளி சட்னி மற்றும் பாசிப்பருப்பு சாம்பார் எடுத்துக் கொள்வது நல்லது.
இதனுடன் காய்கறி சூப் அல்லது இரண்டு முட்டையின் வெள்ளை கரு மட்டும் சாப்பிடலாம்.
காலை 11 மணி:
பழங்கள் அல்லது காய்கறிகள் சாப்பிடுவது நல்லது
மதியம் 1.30 மணி
கைக்குத்தல் அரிசியில் செய்த சாப்பாடு சப்பாத்தி மீன் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
மாலை நேரத்தில் சப்பாத்தி உடன் வெந்திய இலை சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடலாம். பிறகு பால் ஒரு டம்ளர் குடிக்கலாம்.
இரவு நேரத்தில் தானியத்தில் செய்த ரொட்டி இதற்கு இணையாக காய்கறி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இவை அனைத்தையும் இதே நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. குறிப்பாக பசி இருக்கும் நேரத்தில் மட்டுமே சாப்பிட வேண்டும்.