பெண்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் முக்யமான ஒரு விஷயமாகும்.அந்தவகையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்களை கொண்டு பானம் தயாரித்து பருகி வந்தால் கர்ப்பிணி தாய் மற்றும் கருவில் வளரும் சிசுவின் ஆரோக்கியம் மேம்படும்.
தேவையான பொருட்கள்:
1)தக்காளி – ஒன்று
2)கேரட் – ஒன்று
3)பீட்ரூட் – ஒன்று
4)பெரிய வெங்காயம் – ஒன்று
5)நாட்டு சுரை – ஒன்று
6)கொத்தமல்லி தழை – சிறிதளவு
7)சீரகம் – அரை தேக்கரண்டி
8)பூண்டு பற்கள் – நான்கு
9)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
10)மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி
11)உப்பு – தேவையான அளவு
12)இஞ்சி துண்டு – ஒரு பீஸ்
செய்முறை விளக்கம்:
*முதலில் ஒரு கேரட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
*அடுத்து ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
*அடுத்து ஒரு சுரைக்காயை தோல் நீக்கிவிட்டு ஒரு பீஸ் மட்டும் எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.சிறிய பிஞ்சு சுரைக்காயாக இருந்தால் முழுவதையும் எடுத்துக் கொள்ளலாம்.
*அடுத்து சீரகம் மற்றும் மிளகை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
*அடுத்து ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் பூண்டு பற்கள் மற்றும் இஞ்சி துண்டை தோல் நீக்கிவிட்டு பேஸ்ட் பதத்திற்கு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
*பின்னர் பாத்திரம் ஒன்றில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள கேரட்,பீட்ரூட்,தக்காளி,சுரைக்காய் போன்றவற்றை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
*காய்கறி நன்றாக கொதித்து வந்ததும் பூண்டு மற்றும் இஞ்சி விழுதை அதில் போட்டு கலந்துவிட வேண்டும்.
*அடுத்து இடித்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகப் பொடியை அதில் கொட்டி கரண்டி கொண்டு கலந்துவிட வேண்டும்.
*பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம்,மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைத்தால் சூப் தயாராகிவிடும்.இந்த காய்கறி சூப்பை கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பருகி வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.