கர்ப்பிணி பெண்கள் குங்குமப் பூ சாப்பிட்டால் குழந்தை கலராக பிறக்குமா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

Photo of author

By Rupa

கர்ப்பமான பெண்கள் தினமும் பாலில் குங்குமப் பூ கலந்து குடிக்க வேண்டும் என்று பலரும் கூறி கேள்விப்பட்டிருப்பீர்கள்.இதற்கு காரணம் குழந்தை கலராக பிறக்கும் என்பது தான்.குழந்தை கருப்பாக பிறந்துவிடக் கூடாது என்பதற்காக கர்ப்பிணி பெண்ணிற்கு குங்குமப் பூ கலந்த பாலை கொடுக்கின்றனர்.அந்த அளவிற்கு வெள்ளை நிறத்தின் மீது மக்களுக்கு அதிக ஆர்வம் ஏற்படுகிறது.

சில பகுதிகளில் சீமந்த விழாவில் குங்குமப் பூ கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.குங்குமப் பூ பால் குழந்தையை சிவப்பழகாக மாற்றும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது.

ஆனால் குங்குமப் பூ சாப்பிட்டால் குழந்தை கலராக பிறக்குமா என்று எப்பொழுதுவது யோசித்திருக்கீர்களா? குழந்தை கலருக்கும் குங்குமப் பூவிற்கு எந்த சம்மந்தமும் இல்லை.குழந்தையின் மரபணுக்களே நிறைத்தை தீர்மானிக்கிறது.குழந்தையின் பெற்றோர் மரபணு மற்றும் மெலனின் சுரப்பியை பொறுத்து தான் குழந்தையின் நிறம் மாறுகிறது.

மெலனின் அதிகமாக இருக்கும் குழந்தை கருப்பாகவும்,மெலனின் குறைவாக இருக்கும் குழந்தை வெள்ளையாகும் பிறக்கிறது.எனவே குங்குமப் பூவிற்கும்,குழந்தையின் கலருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் குங்குமப் பூ கலந்த பாலை குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.அதற்கு முக்கிய காரணம் கர்ப்ப காலத்தில் சிலருக்கு அடிக்கடி வாந்தி ஏற்படும்.குங்குமப் பூவில் வரும் வாசனை வாந்தியை கட்டுப்படுத்த உதவும்.அது மட்டுமின்றி பசி உணர்வையும் கட்டுப்படுத்த உதவுகிறது.