ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குள் இருந்தால் 10 லட்சம் வரை கடனுதவி!! PM வித்யாலட்சுமி திட்டம்!!

Photo of author

By Gayathri

இனி எந்த விதமான உத்தரவாதமும் இல்லாமல் மாணவர்களுக்கு 7.50 லட்சம் வரையில் கல்விக் கடன் வழங்கப்படும் என மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிஎம் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கான நோக்கமாக நன்றாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு 75% மத்திய அரசின் உத்தரவாதத்துடன் 7.50 லட்சம் வரையில் கடன் வழங்கப்படும். அதன் பிறகு ஆண்டுக்கு ‌8 லட்சம் வருமானம் உள்ள மாணவர்களின் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் 10 லட்சம் வரையில் கடன் பெற்றுக் கொள்வதோடு 3 சதவீத வட்டி சலுகையும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இதற்கு மாணவர்கள் எந்த விதமான உத்திரவாதங்களையும் கொடுக்க தேவையில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிஎம் வித்யாலட்சுமி தளத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் முழு தொகையினையும் பணமாகவே பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனுடன் சேர்த்து மேலும் ஒரு செய்தியையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் பி எம் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்கள் வேறு எந்த அரசு மானியங்களையோ உதவி தொகைகளையும் பெற முடியாது எனவும் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.