உடம்பில் இந்த அறிகுறிகள் இருந்தால் பக்கவாதம் வரப் போகிறதென்று அர்த்தம்!! மக்களே உடனே செக் பண்ணிக்கோங்க!!

Photo of author

By Divya

உடம்பில் இந்த அறிகுறிகள் இருந்தால் பக்கவாதம் வரப் போகிறதென்று அர்த்தம்!! மக்களே உடனே செக் பண்ணிக்கோங்க!!

மூளைக்கு இரத்த விநியோகம் தடைபடும் ஒரு நிலை பக்கவாதம் என்று சொல்லப்படுகிறது.நமது உடலில் இரத்த நாளங்கள் மூலம் மூளைக்கு இரத்தம் செல்கிறது.இந்த இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுதல் அல்லது இரத்த நாளங்களின் சிதைவு,இரத்த கசிவு ஏற்படுதல் போன்ற காரணங்களால் மூளை பக்கவாதம் ஏற்படுகிறது.பக்கவாதம் திடீரென ஏற்படக் கூடிய ஒரு பாதிப்பு என்றாலும் சில அறிகுறிகளை வைத்து அதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.

பக்கவாதத்திற்கான அறிகுறிகள்:

1)கை,கால் பலவீனம்
2)அதிக சோம்பல்
3)தெளிவற்ற பேச்சு
4)முகத்தில் தளர்வு ஏற்படுதல்

பக்கவாத்திற்கான காரணங்கள்:

1)வயது முதுமை
2)சோம்பேறி தனமான வாழ்க்கை முறை
3)அதிக மன அழுத்தம்
4)உடல் பருமன்
5)புகைபிடித்தல்
6)உயர் இரத்த அழுத்தம்
7)நீரழிவு நோய்

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.ஆரம்பகால பக்கவாதத்தினை எளிதில் குணப்படுத்திவிட முடியும்.பக்கவாதம் ஏற்படுவது மூளை,இரத்த குழாய்கள்,நியூரான்கள் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்டது.

பக்கவாதத்தை குணமாக்க தேவையான சோதனைகள்:

1)ஏபிசி கண்காணிப்பு
2)CT ஸ்கேன்
3)எம்ஆர்ஐ
4)MRA
5)EEG
6)இரத்த குளுக்கோஸ் சோதனை

பொதுவாக பெண்களை விட ஆண்கள் பக்கவாத பாதிப்பை அதிகளவில் சந்திக்கின்றனர்.ஆனால் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் பொழுது அவை உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

பக்கவாதத்தில் இஸ்கிமிக் ஸ்ட்ரோக்,அடைபட்ட தமனிகள்,ரத்தக்கசிவு பக்கவாதம்,மினி ஸ்ட்ரோக் என்று பல வகைகள் இருக்கிறது.ஆனால் பெரும்பாலான மக்கள் இஸ்கிமிக் ஸ்ட்ரோக் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.எந்த பக்கவாதமாக இருந்தாலும் அதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் எளிதில் அதை குணப்படுத்திவிட முடியும்.