என்ன மருந்து எடுத்தாலும் சளி குணமாகவில்லையா… அப்போ கற்பூரவள்ளி இலை டீ குடித்து பாருங்க… 

Photo of author

By Sakthi

 

என்ன மருந்து எடுத்தாலும் சளி குணமாகவில்லையா… அப்போ கற்பூரவள்ளி இலை டீ குடித்து பாருங்க…

 

நம்மில் பலருக்கும் இருக்கும் சளித் தொல்லையை குணமாக்க கற்பூரவள்ளி இலையை பயன்படுத்தி டீ தயார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.

 

மழைகாலமாக இருந்தாலும் சரி வெயில்காலமாக இருந்தாலும் சரி சளி என்ற தொற்று நோய் அனைவருக்கும் ஏற்படும். இந்த சளி ஏற்பட்டுவிட்டால் மூக்கடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், மூக்கில் சளி வடிதல் போன்று பல தொந்தரவுகள் நமக்கு ஏற்படும்.

 

இதை குணமாக்க நாம் மாருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் தற்காலிகமாக குணமாகி மீண்டும் ஏற்படும். ஒரு சிலருக்கு எந்தவித மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டாலும் சளி குணமாகாது. அவ்வாறு குணமாகாத சளியை குணப்படுத்த கற்பூரவள்ளி இலை டீ எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

 

கற்பூரவள்ளி டீ தயார் செய்ய தேவையான பொருட்கள்…

 

* கற்பூரவள்ளி இலைகள்

 

* இஞ்சித்துருவல்

 

* டீத்தூள்

 

* எலுமிச்சை சாறு

 

* தேன்

 

கற்பூரவள்ளி இலை டீ தயார் செய்யும் முறை…

 

கற்பூரவள்ளி இலைகளை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

 

தண்ணீர் நன்கு கொதித்த பிறகு இதில் கற்பூரவள்ளி இலைகள், இஞ்சித் துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

 

இறுதியாக அடுப்பை அனைத்துவிட்டு இந்த டீயை ஒரு டம்ளரில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு தேவையான அளவு தேன் கலந்து கொள்ள வேண்டும்.

 

இறுதியாக இதில் எலுமிச்சை சாறு கலந்து விட்டால் கற்பூரவள்ளி டீ தயார். இதை தினமும் குடித்து வந்தால் சளித் தொந்தரவு இருக்காது.